10-31-2004, 07:07 PM
கறுணா Wrote:இனி ராமராசுவையோ, குமாரதுரையரையோ, கே.ரி.ஆரையோ.. ஒருதரும் ஒண்டும் கதைக்கப் போவதில்லை! நங்களும் இப்படி பாடை பீடையென்று வந்து பழைய பல்லவியை தொடங்குவம். கேட்பார் யாருமில்லை.
இவர்களைப் பிரபல்யம் ஆக்கியதே இந்தப் பத்திரிகையாளர்தான். சும்மா எட்டிக்கூடப் பார்ப்பார் இல்லாமல் இருந்த உந்தத் தளங்களையும் இங்கையும், வானொலியிலையும் உயர்த்திவிட்டு, அவைகளைப் பார்க்காதவர்களும் அங்கு என்ன நடக்குது என்று பார்க்கப்பண்ணியது இந்தப்பத்திரிகையாளர்தான்.
ஏற்கனவே நான் சொன்ன விடயம் தான். இவர் செய்வது "டபிள் கேம்". உங்களுக்கெல்லாம் மணி கட்டின மாடுதான் சொல்ல வேண்டுமென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இவரின் தொடர் நடவடிக்கைகளை நீங்கள் பார்த்தால் சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் சில தகவல்களை இங்கு தருகின்றேன்.
- நெருப்பு, மீன்பாடும் தளங்களுக்கும் இவருக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றது. இன்னொருவரின் தகவலின் படி மீன்பாடும் தளம் இவரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
- KTR ற்கு நோர்வேயில் நடைபெற்ற செய்தி வழங்கியதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டார். (அந்தச் செய்தி இவரைத் தவிர வேறு யாரும் வழங்கியிருக்க முடியாது என்று முன்னர் கூறியிருக்கின்றேன்)
- முன்பு புலத்தில் ஒரு வானொலி, புலிகளுடன் நேரடித் தொடர்பு என்று சொல்லி பின்னர் அம்பலப்படுத்தப்பட்டு இன்று முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிராக இயங்கி வருகின்றது. இதேபோல் புலிகளுடன் நேரடித் தொடர்பு என்ற கருத்துப்பட பல செய்திகளை ஒரு தளம் தற்போது வெளியிட்டு வருகின்றது. இத்தளம் இவராலும் இன்னொரு "கருத்துக்கூறவல்ல அதிகாரியாலும்" தான் நடாத்தப்படுகின்றது. இத்தளத்தின் செயல்கள் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைகின்றது. பல சிறிய சம்பவங்களை இந்தத்தளம் மூலம் பெரிதாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றார்.
(கருத்துக்கூறவல்ல அதிகாரிகள் விபரம் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&start=1095 )
- வானொலியில் இவரது தூரநோக்கற்ற செயலினால் போராட்டத்தில் இருந்து பலரை விலகிச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. இந்தியா தொடர்பாக கடந்த ஞாயிறு சொன்ன வார்த்தை எவ்வளவு பேரை மனம்நோகடித்து, போராட்டத்திற்கு அவர்கள் தரும் ஆதரவை விலக வைக்கும் என யாராவது யோசித்தீர்களா?
- சங்கரிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லுவாரா?
- ராம்ராச்சுடன் ஏற்கனவே ஒன்றாக இருந்தவர் இவர். இப்போது இவருக்கு தொடர்பில்லையா?
- இவரது வருமானம் என்ன என்று இவர் சொல்லுவாரா?
- அனைவரையும் துரோகி துரோகி என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார். இவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது.
- இவருக்கு ஜல்ரா போட சிலரை வைத்துள்ளார். வானொலிக்கு இவர் வந்தவுடன் அவர்கள் வந்து இவர் ஏற்கனவே கூறியது போன்று ஆமா போடுவார்கள். அவதானித்துப்பாருங்கள் புரியும்.
ஆக கள்ளன் கள்ளன் என்று சொல்லி கள்ளனும் சேர்ந்து கள்ளனைத் தேடும் செயல்போன்று இவரது செயற்பாடும் உள்ளது.
தயவு செய்து உங்களுக்கும் தெரிந்த தகவல்களை இங்கு பரிமாறிக் கொள்ளுங்கள். இந்த இரட்டை வேடதாரியை அம்பலப்படுத்துவோம்.
[i][b]
!
!

