Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு சொல்லும் பாடங்கள்...!
#2
<b>மீண்டும் JR அரசின் தந்திரோபாயம்! </b>

தமிழர்கள் வசிக்கும் முக்கிய வெளிநாடுகளுக்குத் தமிழ்த் தூதுவர்கள்!! ஒரு நாட்டின் அரசானது அதனது நலன்கனைப் பேணவும், அதன் கொள்கைகளை நியாயப்படுத்தவும், வேறொரு நாட்டிற்கு அதன் வதிவுத் தூதர்களை அனுப்பிச் செயற்படவைக்கிறது. இவைகளைச் அரசு சார்பாகச்; சிறந்த முறையில் செய்ய, நம்பிக்கையான முறையிலும், விசுவாசகமாகவும் செயற்படக்கூடியவர் எனக் கருதப்படுபவரை அது தேர்ந்தெடுத்து, வதிவுத் தூதுவரா வெளிநாட்டிற்கு அனுப்புகிறது.

ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை நடாத்திவரும் இன்றைய காலகட்டத்தில், தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளுக்கு அனுப்பப்படும் வதிவுத் தூதுவர்கள், இலங்கை அரசின் நலன்களைப் பேணவும், இலங்கை அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும், முக்கிய ஒரு வேலையைச் செய்யவேண்டியுள்ளது. அது என்னவென்றால், <b>குறிப்பிட்ட அந்த நாட்டில் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிக்கும் தமிழ் மக்களின் விபரங்களை இரகசியமாகச் சேகரித்தும், அவர்களின் செயற்பாட்டுத் திட்டங்களை இரகசியமாக அறிந்தும், அவற்றை ஆராய்ந்து, அரசுக்கு அறிவிப்பதும், முறியடிப்பு வேலைகளையும், எதிர் பிரசாரங்களையும்; செய்வதுமாகும்</b>!

இந்தநிலையில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் பெருமெண்ணிக்கைகளில் வாழும் நாடுகளுக்கு, கற்றோர்கள், பெரியோர்கள் எனக் கருதப்படும் தமிழர்களை வதிவுத் தூதுவர்களாக அனுப்பி, தமிழ் பேசும் மக்களிடையே ஊடுருவல்களை மேற்கொண்டு, தகவல்களைச் சேகரித்தும், எதிர்ப்பிரசாரங்களைச் செய்தும், முறியடிப்பு வேலைகளைச் செய்வதே, தந்திரோபாயமானது.

1977ஆம் ஆண்டின் பின்னர் JR அரசால் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயத்தினை, இன்றைய அரசு கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

1977ஆம் அண்டில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள்மீது சிங்களத் தீவிரவாதிகளால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர்கள் தீவிரவாதிகளாக ஆகுவதைத் தடுக்க, JR அரசானது வெளிநாட்டுப் பணத்தை (Foreign Exchange) வழங்கி, தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு வெளியேறி, பிற நாடுகளுக்குச் செல்வதை ஊக்குவித்தது.

இதனால் பல்லாயிரக்கணிக்கான தமிழ் இளைஞர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்து சென்றனர்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்குத் தரை மார்க்கமாகச் சென்றிருந்த தமிழ் இளைஞர்கள், இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத போக்கை நன்கு உணர்ந்திருந்த நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் புதிதாக அடைந்திருந்த தமிழ் இளைஞர்களை அரசியல் தஞ்சம் கோர உதவி, அவர்களிடமிருந்து பெறப்பட்ட சிறு நிதியுதவிகளைக் கொண்டு, இலங்கை அரசியலை அந்தந்த நாட்டு அரசுகளுக்கும்;, அமைப்புக்களுக்கும் விளக்கவும், விடுதலைப் போராட்டத்திற்கான பிரசாரங்களைச் செய்யவும் திட்டமிட்டுச் செயற்பட ஆரம்பித்திருந்ததுடன், இந்த நாடுகளில் தமிழ் பேசும்; மக்களுக்கெனச் சட்டரீதியலான அமைப்புக்களையும் உருவாக்கித் திட்டமிட்ட விதத்தில் செயற்பட்டனர்.

தமது தந்திரோபாயம் முறியடிக்கப்படுவதை உணர்ந்த துசு அரசானது, எதிர் முறியடிப்பு வேலைகளைச் செய்ய, இரண்டு காரியங்களைச் செய்தது. அவையாவன:

1. மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்களை வதிவுத் தூதுவர்களாக அனுப்பி, தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவல்களைச் செய்து, தமிழர்களின் திட்டங்களை அறிந்து, முறியடிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்த முயன்றமை Idea

2. தமிழர் கூட்டணியின் தலைவரையும், MP களையும் இந்நாடுகளுக்கு அனுப்பி, இளைஞர்களைப் பிரித்து, தமக்கு ஆதரவாக தமிழர் அமைப்புக்களை ஆரம்பித்துச் செயற்பட முயற்சித்தமை. Idea

அதிஷ்டவசமாக, யாழ்குடாவின் சுயநல அரசியல்வாதிகளின் கெடுபிடிகளால் துன்பமான அனுபவங்களைப் ஏற்கனவே பெற்றிருந்த பல இளைஞர்கள் இந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வந்ததால், JR அரசினதும், தமிழர் கூட்டணியினதும் சதிவேலைகளை முறியடித்து, தமிழர்களது விடுதலைப் போராட்டம் முன்னேற வழிகோலியிருந்தனர்.

<b>இன்று இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டமானது அதனது மிக முக்கிய கட்டத்தினை அடைந்துள்ள வேளையில், தமிழர்கள் பெருமளவில் வாழும் வெளிநாடுகளில் சதி, நாசகார வேலைகளைச் செய்யவும், இரகசியமாகத் தகவல்களைத் தமிழர்கள் மத்தியிலிருந்து பெற்று, முறியடிப்பு வேலைகளைச் செய்யவும், எதிர்ப்பிரசாரங்களை மேற்கொள்ளவும் தமிழர்களால் கற்றோர், பெரியோர் எனக் கருதப்படுபவர்களை அந்த நாடுகளில் வதிவுத் தூதுவர்களாக நியமிக்கும் திட்டமானது இன்றைய அரசினால் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது. சில நாடுகளுக்கான தூதுவர்கள், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டும் உள்ளதாக அறிய வருகிறது.</b>

இதில் வியப்பானது என்னவெனில், இந்த நாசகார, சதி வேலைகளில் அரசுக்கு விசுவாசமாகச் செயற்படக்கூடியவர்கள் எனக் கருதப்படும் சிலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவர்களாக இருப்பதும். <b>தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தாம் ஆதரவு அளிப்பதுபோலவும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் தாம் அக்கறை உடையவர்களாகவும் மேடைகளிலுடாகவும், தினசரிகலுடாகவும் காட்டிவந்தவர்களுமாகும்</b>!

இந்தநிலையில், கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களும், விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துச் செயற்படுபவர்களும், <b>அரசினால் தூதுவர்களாகப் பதிதாக அனுப்பப்படும் தமிழர்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்காளால் மேற்கொள்ளப்படவுள்ள முறியடிப்பு வேலைகளை முறியடிக்கத் தம்மைத் தயார்ப்படுத்வேண்டியுள்ளது.</b>

அடக்குமுறையாளர்களதும், கைக்கூலிகளினதும் செயற்பாடுகளை தமிழ் பேசும் மக்கள் இன்னும் அறியாத முட்டாள்களாகத்தான் உள்ளனர் என இவர்கள் கருதுவது, நகைப்புக்கிடமானது!

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டமானது இவர்களைப் போன்ற பலரை ஏற்கனவே கண்டுவந்துள்ளது என்பதும் அவதானிக்கத் தக்கது!

ஆனால், விடுதலைப் போராட்டம் முன்னேறியவாறுதான் உள்ளது! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

யாழிலிருந்து சாணக்கியன
TamilSociety.com
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 10-30-2004, 11:14 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 02:57 PM
[No subject] - by ratha - 11-20-2004, 04:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)