10-29-2004, 11:13 AM
<b>சினிமாப் பட வாழ்த்து மடல்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த முடிவு </b>
தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் படங்கள் பொறிக்கப்பட்ட வாழ்த்து மடல்கள் மற்றும் கலண்டர்களின் விநியோகத்தையும் விற்பனையையும் கட்டுப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாக அறிய வந்துள்ளது.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் நிதித் துறையின் ஆயப்பகுதியினர், வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
சினிமா நட்சத்திரங்களின் படங்களை மட்டும் தாங்கிய பெரும் தொகையான வாழ்த்து மடல்கள் தமிழர் பிரதேசங்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. புதிய ஆண்டு பிறக்கவிருப்பதை ஒட்டி சினிமாப் படங்களைத் தாங்கிய பெருமளவு கலண்டர்களும் கூட அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படத் தொடங்கியுள்ளன.
தமிழர் பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகள், படங்கள் மற்றும் விடுதலைப் போருடன் தொடர்புடைய ஆவணப் படங்களை கலண்டர்களிலும் வாழ்த்து அட்டைகளிலும் அச்சிட்டு ஈழத்தமிழர்களின் அடையாளத்தை பேணிக் காப்பது அவசியம் என்று பல தரப்புகளில் இருந்தும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே சினிமா மோகத்தைத் தூண்டும் வாழ்த்து அட்டைகளின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தப் புலிகள் தீர்மானித்திருக்கின்றனர் என்று அறிய வந்தது.
சினிமாப் படங்கள் அச்சிடப்பட்ட தீபாவளி வாழ்த்து மடல்களைத் தொகையாக எடுத்து வந்து விற்பனை செய்வதை ஆயப்பகுதியினர் தடைசெய்திருக்கின்றனர். புளியங்குளம் சோதனை நிலையம் ஊடாக இவற்றை எடுத்து வருவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
விமான மார்க்கமாகக் குடாநாட்டுக்குள் இத்தகைய அட்டைகளை எடுத்துவந்து விநியோகிப் போருக்கும் ஆயப்பகுதியினர் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றனர் என்றும் தெரியவந்தது.
நன்றி உதயன்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>