10-28-2004, 01:34 PM
<b>தனிநாடு கோரிக்கையை கைவிடவில்லை: புலிகள்</b>
தனி நாடு கோரிக்கையை நாங்கள் இன்னும் கைவிடவில்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
தமிழர் பகுதிகளில் சுயாட்சி அதிகாரம் மறுக்கப்பட்டால் தனி நாடு அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
பாலசிங்கம் எழுதியுள்ள 'வார் அண்ட் பீஸ்' என்ற புத்தகத்தில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த புத்தகத்தின் விவரங்களை தமிழ்நெட் இணையத் தளம் வெளியிட்டுள்ளது. அதில் பாலசிங்கம் கூறியிருப்பதாவது:
கூட்டாட்சியின் அடிப்படையில் வட கிழக்கில் சுயாட்சி நிர்வாகம் அமைக்க ஒப்புக் கொண்டோம். நார்வே தலைநகர் ஓஸ்லோ நடந்த 3 சுற்றுப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் கூட்டாட்சி முறையை பரிசீலிப்பதாகத் தான் சொன்னோம். ஆனால், அதை நாங்கள் பிரகடனமாக வெளியிடவில்லை.
இந்த விஷயத்தில் புலிகளின் நிலை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ஓஸ்லோ பிரகடனம் என்ற பெயரில் எங்களது கருத்தை திரித்துக் கூறுவது தவறு.
தமிழர்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்க இலங்கை அரசு முன் வராவிட்டால் தனி நாடு அமைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களது தனி நாடு கோரிக்கையை இன்னும் நாங்கள் கைவிட்டுவிடவில்லை. உரிமைகள் மறுக்கப்படும்பட்சத்தில் அது தான் எங்களுக்கு ஒரே வழி.
எக்காரணம் கொண்டும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டுத் தர முடியாது என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் முயற்சிகளில் ஈடுபட ஜப்பானிய அமைதித் தூதர் யசுசி அகாசி இன்று கொழும்பு வருகிறார்.
இந் நிலையில் அயர்லாந்து தலைநகர் டாப்ளினில் புலிகளின் உயர் மட்டக் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட புலிகளின் உயர் மட்ட அரசியல் குழுவினர், இறுதிக் கட்டமாக அயர்லாந்தில் இச் சந்திப்பை மேற்கொள்கின்றனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன், அமைதிச் செயலக செயலாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே போர் ஆயத்தப் பணிகளை முடுக்கிவிடும் வகையில் முப்படைகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
போர் திட்டமிடல் கமிட்டி என்ற இந்தக் குழுவுக்கு கடற்படைத் தளபதி சத் வீரசேகர தலைமை வகிப்பதாகத் தெரிகிறது.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>