Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் பத்திரிகையின் செய்தி
#5
<b>'இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை அடிப்படையின்றி பேச்சுக்கள் சாத்தியப்படப் போவதில்லை"</b>

<b>"தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க - புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைதான் - அடிப்படையாக அமைய முடியும். இது புலிகள் இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்"</b> என்று இன்று வெளிவந்துள்ள புரட்டாதி-ஐப்பசி மாதத்திற்குரிய 119ஆவது குரல் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முகப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமாதானப் பேச்சுக்கள் ஆக்கபுூர்வமானதாக அமைய வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பினால் இந்த அரசியல் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏற்க மறுப்பதென்பது சமாதான வழிமூலமான அரசியல் தீர்வுக்கு சிங்கள அரசு தயாரில்லை என்பதையே காட்டுவதாக இருக்கும்.

புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான ஆவணம் சர்வதேச சட்டவல்லுனர்களின் துணையுடன் தயாரிக்கப்பட்டது. சர்வதேச சட்டங்களையும் - நியமங்களையும் - ஜனநாயக பண்புகளையும் உள்வாங்கி, இலங்கைத்தீவின் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்;ப தயாரிக்கப்பட்டதாகும்.

சமாதானப் பேச்சுக்கள் முன்னரைப் போலல்லாது அர்த்தமுள்ளதாகவும் - தமிழ்மக்களின் ஆதரவுடனும் நடாத்தப்பட வேண்டும். போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மனிதாபிமான தேவைகளை மற்றும் அவர்களின் சுய பாதுகாப்பு - இயல்பான வாழ்க்கை என்பவற்றை நிறைவேற்றக்கூடிய ஒரு தற்காலிக நிருவாக அமைப்பு முறைதான் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையாகும்.

எனவே, சந்திரிகா அரசு குற்றம் சாட்டுவதுபோல அந்த இடைக்கால வரைபு பிரிவினைக்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானதாகும். சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் - எந்தவித மூடிமறைப்புகளுமற்று தயாரிக்கப்பட்ட இந்த இடைக்கால வரைபை - சந்திரிகா அரசு - சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது அபத்தமானது. சர்வதேச சமூகத்தையும் சந்தேகிப்பதாக உள்ளது.

புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையில்தான் பேச்சு வார்த்தைகள் அமையவேண்டும் என்பது தமிழ்மக்களின் அரசியல் ஆணையாகும். நாடாளுமன்றிற்காக அண்மையில் நடந்த பொதுத்தேர்தல் வாக்களிப்பின் வாயிலாக தமிழ்மக்கள் இந்த மக்கள் ஆணையை புலிகள் இயக்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

எனவே, இந்த மக்கள் ஆணைக்கு சந்திரிகா அரசு மதிப்பளிக்க வேண்டும்.

அதேவேளை, புலிகளின் இந்த இடைக்கால வரைபை அடிப்படையாகக் கொண்டு அமைதிப் பேச்சுக்களை சந்தி ரிகா அரசு ஆரம்பிக்கவேண்டும் என்று ஐ.தே.கட்சியே கோரியுள்ளது. தேவையேற்பட்டால் இதற்கான நாடாளுமன்றப் பலத்தை சந்திரிகா அரசுக்கு வழங்கி - உதவ தனது கட்சி தயார் என திரு.ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற பிரதான கட்சிகளும் இதையேதான் சந்திரிகா அரசுக்குக் கூறி வருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல முக்கியமான பல சிங்கள அமைப்புக்களும் புலிகளின் இடைக்கால வரைபின் அடிப்படையில் பேச்சை ஆரம்பிக்குமாறு கோரிவருகின்றன. முன்னெப்போதும் கிடைத்திராத இந்த வரலாற்று வாய்ப்பை சந்திரிகா அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமாதானத்தை நேசிப்போரின் வேண்டுகோளாக உள்ளது.

இந்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபுமீது சர்வதேச சமூகமும் ஆதரவுப் போக்குடனேயே உள்ளது. புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தற்போதைய ஆதரவு இதையே வெளிப்படுத்துகின்றது.

இந்த நிலையில், புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால வரைபின் அடிப்படையில் சந்திரிகா அரசு உடனடியாக பேச்சை ஆரம்பிப்பதே சாலச் சிறந்ததாகும்.

இதைவிடுத்து, மாற்றுத் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைந்து அதன் அடிப் படையிலேயே பேச்சை ஆரம்பிக்க முடியும் என்று சிங்கள அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமற்றது. வரலாற்றைப் பின்நோக்கி நகர்த்த முனையும் அந்த வீண்முயற்சிக்கு ஒத்துழைக்க புலிகள் இயக்கம் தயாராக இல்லை.

தனது தீர்வுத்திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி புலிகளுக்கு எதிராக ஒரு சர்வதேசப் பரப்புரையை அம்மையார் நடாத்தத் திட்டமிடுவதும் பயனளிக்கப் போவதில்லை. சிங்கள அரசுகளின் அரசியல் கூத்துக்களை இனியும் தலையாட்டியவாறு பார்த்து - இரசிக்க சர்வதேச சமூகம் தயாராக இருக்கமாட்டாது என்று தமிழ்மக்கள் நம்புகின்றனர்.

சந்திரிகா அரசை நோக்கிப் புலிகள் இயக்கம் விடுக்கும் அழைப்பு இதுதான். 'இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு துணிகரமான நகர்வுகளை - உறுதியுடன் முன்னெடுக்கவேண்டும்" என்பதுதான்.

இவ்வாறு "விடுதலைப் புலிகள்" பத்திரிகை தெரிவித்துள்ளது

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-22-2004, 01:54 AM
குருவிகளே - by Mayuran - 07-23-2004, 12:52 AM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 12:58 AM
[No subject] - by Kanani - 10-28-2004, 11:49 AM
[No subject] - by Kanani - 10-28-2004, 01:15 PM
[No subject] - by kuruvikal - 10-28-2004, 01:34 PM
[No subject] - by Kanani - 11-04-2004, 02:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)