Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பன் மரணமும் புளுகு மூட்டைகளும் திசைதிருப்பல்களும்.....!
#8
வீரப்பன் உடல் உறுப்பு ஆய்வு:"ரகசியம்' காக்கின்றனர் அதிகாரிகள்
கோவை:கோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனின் குடல், கணையம், கல்லீரல் ஆகியவை பரிசோதனைக்கு பின்பு சென்னைக்கு ஆய்வறிக்கை ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அதிரடிப்படை வீரர்களால் தர்மபுரியில் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் உடல் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வீரப்பனின் முக்கிய உடல் உறுப்புகள் குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் சில பகுதிகள் கோவை மற்றும் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவையில் இந்த ஆய்வுகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஆய்வு அறிக்கைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு கோவை மற்றும் சென்னையில் இந்த ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால் வீரப்பன் சாவில் மர்மம் நீடித்து வருவதால், இரு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையில் ஏதாவது வித்தியாசங்கள் தெரிகிறதா என்பதை பார்ப்பதற்காக இப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை தடயவியல் ஆய்வகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக இரண்டு அதிகாரிகள் மட்டுமே இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கைகள் நேற்று சென்னைக்கு ரகசியமாக

அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இது குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படமாட்டாது. மிக ரகசியமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றனர்
http://www.dinamalar.com/
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-23-2004, 06:25 PM
[No subject] - by AJeevan - 10-24-2004, 01:44 AM
[No subject] - by kavithan - 10-24-2004, 04:16 AM
[No subject] - by ã÷ò¾¢ - 10-27-2004, 10:02 AM
[No subject] - by kuruvikal - 10-27-2004, 02:03 PM
[No subject] - by kavithan - 10-27-2004, 09:34 PM
[No subject] - by shanmuhi - 10-27-2004, 09:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)