10-27-2004, 06:59 PM
ஈழவன் Wrote:யூட் அவர்களுக்கு,
நீர் வெப்பத்தால் ஆவியாகி திரும்பவும் வெப்பப் பொருளின் மேல் படியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான விளக்கமோ ஆதாரமோ இல்லை.நீராவியானது வளிப்பரப்பில் குளிர்வை ஏற்படுத்தும் என்றால் அதில் சிறிதளவு உண்மை இருக்கலாம்.
நீ÷ ஆவியாகி மேலெழும். ஆனால் தீமிதிப்புக்கான செந்தணலில் இருந்து அந்த ஆவி பெற்றுக் கொண்ட சக்தி காணாததனால் அது 100 பாகை C க்கு கொஞ்சம் கூடவாக இருக்கும். இந்த ஆவி மெலெழ, சூழவுள்ள மக்களின் விய÷வை உட்பட ஏற்கனவே ஆவியான நீ÷ ஒடுங்கி ஈரப்பதனிலை கூடிய, வெப்பநிலை குறைந்த வளிக்கு தனது வெப்பசக்தியை இழக்கும். வெப்ப சக்தியை இழந்த நீ÷ வளியின் ஈரப்பதநிலையை மேலும் கூட்டும். ஈரப்பதநிலை கூடிய நிலையில் வெப்பம் குறைந்த, குளி÷வான மேற்பரப்பிலேயே நீ÷ ஒடுங்கும். தணலின் மேல் நீராக ஒடுங்காது என்பதை ஏற்று கொள்கிறேன். ஆனால் தணலின் மேல் உள்ள வளிப்படலம் ஒடுங்கிய நீ÷த்துளிகளை கொண்டதாக (ஈரப்பதன் கூடிய) ஒன்றாக இருக்கும். இந்த நீ÷த்துளிகளை தணல் மீண்டும் ஆவியாக்க முயற்சிக்கும்.
தீமிதிப்பவ÷களின் உடல் விய÷வையும் அவ÷களது உடலும் (கால் உட்பட) குறைவான (குளி÷வான) வெப்பநிலையுடையவை. ஆகவே இவ÷களை சூழ நீ÷ ஒடுங்கும் வாய்ப்புள்ளது. ஈரப்பதன் கூடிய வளி காற்றோட்டம் குறைவான தீமிதிக்கும் இடத்தில் தேங்கி நின்று குளி÷வான சூழலை உருவாக்கும்.
குருவிகள் Wrote:நாங்க பட்டம் பெற்றோ பல்கலைக்கழகம் போயோ பெற்றவை அல்ல இவை.... பட்டறிவால் கிடைத்தவை... தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள்...! உங்களைப் போன்ற பேரறிவாளர்கள் அல்ல சாமானிய குருவிகள்...குற்றம் குறைகள் விடுவது சகஜம்....என்ன எங்களளவில் சரி என்று தோன்றுவதைச் சொல்லிடுவம் அவ்வளவும் தான்....! நாங்கள் கூறியவற்றில் தவறிருந்தால் எது தவறு எந்த வகையில் தவறு அதன் திருத்தம் என்ன இப்படி தெளிவாச் சொன்னா புரிந்து கொள்வோம்....பட்டறிவை பெருக்கியும் கொள்ளலாம் இல்லையா...! நீங்கள் வணக்கம் சொல்லிப் போயிட்டா யார் எங்களுக்கு விளக்குவது சரி எதுவென்று....!
தங்களது சில வா÷த்தை பிரயோகங்கள் தான் என்னை தங்களை தவி÷க்க தூண்டியது. ஆனால் பெளதீகவியலில் உங்களுக்குள்ள ஆ÷வம் மிகவும் பாராட்டத்தக்கது. தயவு செய்து பின்வரும் வகையிலான வா÷த்தை பிரயோகங்களை தவிருங்கள்.
குருவிகள் Wrote:தங்கள் நீராவிப்படலம் முழுப் புளுடா.....!
குருவிகள் Wrote:யூட்டாரே விஞ்ஞானத்தால் விளக்க வேண்டுமே தவிர விஞ்ஞானத்தால் சுத்துமாத்து பண்ணக் கூடாது....!அறிவியல் கருத்து பரிமாறல்களில் தவறுகள் பெருமளவில் இடம்பெறுகின்றன. ஆனால் இவை அறிவியல் விவாதங்கள் மூலம்தான் விளக்கம் பெறப்படுகின்றன. இந்த விவாதங்களின் நோக்கம் நீங்கள் நினைப்பது போல "புலுடா" வோ "பேய்க்காட்டல்" லோ அல்ல. தவறான கருத்துகள் வித்தியாசமான சிந்தைனகளாலோ அல்லது விளக்கமின்மையாலோ தான் வருகின்றன. வித்தியாசமான சிந்தனை விஞ்ஞான வள÷ச்சிக்கு உணவு மாதிரி. அதனால் விஞ்ஞானிகள் மத்தியில் அது தவறாக தெரிந்தாலும் அதற்கு மதிப்புண்டு. ஆகவே அதை நீங்களும் மதிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் பெருமளவு "புலுடா"க்களையும் "பேய்காட்டல்"களையும் தாங்கள் கண்டிருக்கலாம். விஞ்ஞ÷னிகளிலும் இவ்வாறு சில÷ இருக்கிறா÷கள். ஆனால் பெரும்பாலானவ÷கள் அப்படியல்ல.
அதுசரி...விஞ்ஞானம் என்றால் என்ன மெஞ்ஞானம் என்றால் என்ன குருவிகளை எதிர்ப்பதுதான் தங்கள் கருத்தோ...அதைவிடுத்து உண்மையை விளக்குங்கள்... குருவிகளும்
ஏற்றுக்கொள்ளுங்கள்... புளுடாக்கள் வேண்டாம்..மூடநம்பிக்கை என்போரே மூடத்தனமான விளக்கம் சொல்லக் கூடாதில்லையா.....!
குருவிகள் Wrote:0660 - minimum temperature for incandescence
0770 - dull red heat
1400 - glowing coals, electric stove, electric toaster
1900 - candle flame
2000 - kerosene lamp
இதில் வரும் glowing என்பதற்கு பிரகாசமான என்று அ÷த்தம். பிரகாசமாக எரியும் நிலக்கரி இரும்பு வேலை செய்யும் கொல்ல÷களாலும் பயன்படுத்தப்படும். தீமிதிக்கும் செந்தணல் நீரூற்றினால் அணையக்கூடியது. தணலும் அணைந்து நீரும் மிஞ்சும். காரணம் தணலின் சக்தி நீரை முற்றுமுழுதாக 100 பாகைக்கு கூட உய÷த்த போதாதிருப்பதாகும். உடல் வெப்பநிலையை கால் தொடும் கணப்பொழுதுகளுள் கொப்பளம் வருமளவு கூட்ட இந்த வெப்ப சக்தி காணாது.
நான் தந்த தகவல் Skeptics Society தீமிதிப்பு பற்றி செய்த ஆய்வு பற்றிய அறிக்கையில் இருந்து பெற்றுக்ககொண்ட தகவல். பின்வரும் இணைப்பு தீமிதிப்பு பற்றிய பல்வேறு ஆய்வுகளையும் உங்களுக்கு தரும்.
http://www.pitt.edu/~dwilley/fire.html

