07-25-2003, 05:36 PM
மீன் தருமாறு கேட்டதும் அதனைக் கொடுக்க மறுத்த மீனவர் ஒருவரை படையினர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.கடந்த செவ்வாயன்று காக்கைதீவு கடற்கரையில் காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மீனவரால் முறையிடப்பட்டுள்ளது.அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த 22ஆம் திகதி காலை காக்கைதீவுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு கரைதிரும்பிய எலியஸ் சுரேஸ்குமார் என்ற மீனவரிடம் அங்கு நின்ற மூன்று படையினர் தமக்கு ஒருதொகை மீன்களை இலவசமாகத் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால், அந்த மீனவர் மீனைக் கொடுப்பதற்கு மறத்து விட்டார். உடனே அந்த மூன்று படையினரும் சேர்ந்து சம் பந்தப்பட்ட மீனவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவர் பிடித்துவந்த மீன்களையும் நிலத்தில் கொட்டியுள்ளனர்.
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தி னரிடம் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர்றுவான் சந்திரசேகர காக்கைதீவு படைமுகாம் பொறுப்பதிகாரியைக் கேட்டுள்ளார்.