10-27-2004, 01:06 PM
நன்றி ஈழவன் உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும்...
வெப்பநிலை என்பதும் வெப்பம் என்பதற்கும் வேறுபாடுண்டு... வெப்பம் என்பது (சாதாரணமாகக் கொள்வது) திணிவு, குறித்த பொருளின் தன்வெப்பக் கொள்ளளவு, வெப்பநிலை சார்ந்தது... நாம் உணர்வது வெப்பதை அன்றி வெப்பநிலையை அல்ல....எனவே ஒரு பொருளின் வெப்பநிலையை வைத்து உணரும் வெப்பத்தின் அளவை/வெப்பமாற்றத்தின் அளவைத் தீர்மானிக்க வேண்டின் (சாதாரணமான நோக்கில்) அப்பொருளின் திணிவு, தன்வெப்பக்கொள்ளவு வெப்பநிலை/ வெப்பநிலை மாற்றம் எமக்கு வேண்டும்...இப்போ பாருங்கள் மெழுகுவர்த்தி வெளிவிடும் வெப்பத்தின் அளவு தணல் வெளிவிடுவதை விட வெப்பநிலை மட்டும் தீர்மானிக்க முடியாது...! திணிவு, தன்வெப்பக் கொள்ளளவம் என்பனவும் அதைத் தீர்மானிக்கின்றன....! இதை கலோரிமானி கொண்டுதான் நாம் கணிப்பிட முடியும்...! சம அளவு திணிவுடைய மெழுகின் முற்றான தகனத்தின் போது வரும் வெப்பத்தின் அளவையும் அதே அளவு தணல் வெளியிடும் வெப்பத்தின் அளவையும் வைத்தே எது அதிகம் வெப்பதை தருகிறது என்பதை தீர்மானிக்கலாம்... வெப்பநிலை உயர்வென்றாலும் தன்வெப்பக்கொள்ளவு குறைவாயின் வெப்பத்தின் அளவு குறைவடையும்....! அது மட்டுமன்றி நாம் உணரும் வெப்பத்தின் அளவு
வெப்பக் கடத்தல் வெளிவிடப்படும் அளவு என்பனவற்றிலும் தங்கியுள்ளது...!
வெப்பம் இழக்கப்படும் வழிமுறைகள் இழக்கப்படும் சூழலின் தன்மை என்பனவும் உணரும் வெப்பத்தை, வெப்பநிலையை(வெப்பமானி அளவீடு) தீர்மானிக்கும்...!
இது ஒரு மேலோட்டமான விளக்கம் மட்டுமே...!
மனித உடலின் வெப்பநிலை 37oC... கெல்வின் அலகிற்கு மாற்ற 273 யைக் கூட்ட வேண்டும்... இப்போ வெப்பநிலை 310 கெல்வின் (K) ...இப்படித்தான் அங்கு தரவுகள் தரப்பட்டுள்ளன...!
தற்போது வெப்பவியல்..வெப்ப இயக்கவியல் கணிப்பீடுகள் பெரும்பாலும் தனிவெப்பநிலை(கெல்வின் வெப்பநிலை) கொண்டே செய்யப்படுகின்றன...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>