10-27-2004, 01:22 AM
தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பினருக்கும் இடையே றோ அமைப்பின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி அமைப்புத் தொடர்பாக இந்தியாவின் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில இந்திய உளவுத்துறை அதிகாரிகளிற்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்த சுயநலத் தேவைகளுக்ப் பிரிந்த உறுப்பினர்களுடன் இணைந்து கட்சி உருவாக்கியுள்ளமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச்செல்லுமென்று இந்தியப் பிராந்திய கொள்கை வகுப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நன்றி நிதர்சனம்.
நன்றி நிதர்சனம்.

