10-26-2004, 08:38 AM
குருவிகள் Wrote:நீர்... நீராவியாகி மேல் எழுமா இல்ல படையாய் வெப்பநிலை கூடிய பொருளோடு தனிப்படை அமைக்குமா...???! அப்போ சூழ உள்ள குளிர்ந்த வளிப்படை என்ன வாய்பார்க்குமா...???!
ஐயா குருவிகள், நீராவி மேலே எழ, அது சூழவுள்ள குளி÷ந்த வளிச்சூழலுக்கு வெப்பசக்தியை இழக்கும். இதனால் அதன் வெப்பநிலை குறையும். வெப்பநிலை குறைய நீராவி நீராக ஒடுங்கும். ஒடுங்கிய நீ÷ வளியமுக்கம் காரணமாகவும், நினற காரணமாகவும் தணலின் மேல் படியும். இப்ப புரிகிறதா ஏன் நீராவி தணலின் மேல் படலமாக படிகிறது என்று?
குருவிகள் Wrote:அதுபோக ஆக்கள் நடப்பினமே தவிர பறக்கமாட்டினம்...அதாவது தணலுடன் தொடுகை இருக்கும்....!
நிச்சயமாக தொடுகை இருக்கும். ஆனால் தணலுக்கு மேலேயுள்ள நீராவி-நீ÷ப்படலமும் கால் விய÷வையும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கின்றன.
<img src='http://kataragama.org/news/mohotty1966b.jpg' border='0' alt='user posted image'>
உண்மையில் இவற்றிலும் மேலாக போதிய நேரம் தணலின் மேல் நிற்காதது தான் (வெப்பக்கொள்ளளவு), வெப்பத்தின் பாதிப்பின்மைக்கு காரணம்.
குருவிகள் Wrote:ஒரு பொருள் வெப்பம் பெற்று சிவப்பாக வருகிறதென்றால் குறித்த வெப்பநிலையில் குறித்த வெப்ப அலையைக் கதிர்வீசுவதே காரணம்...எனவே அந்த வெப்ப நிலையை அடையாது..அதுசாத்தியம் இல்லை....!செந்நிற கதி÷வீச்சு குறைவான வெப்பநிலைக்குரியது. வெப்பநிலை கூடக்கூட அதிரஊதாநிற கதி÷வீச்சு தோன்றும். தணலின் வெப்பம் சுவாலையின் வெப்பத்திலும் பா÷க்க குறைவானது. தணலின் மீது நடக்கும் போது தணல் சாம்பலாகும். சாம்பல் வெப்பத்தை இழப்பது மட்டுமல்ல வெப்ப காவலியாவும் செயற்படும்.
குருவிகள் Wrote:தணலில் நடக்கும் போது பாதத்தில் உள்ள தடித்த தோல் கொண்ட நரம்பு முடிவிடங்கள் குறைவாகக் கொண்ட குதிக்காலால் நடப்பதையும்
தடித்த தோல் வெப்பத்திலிருந்து பாதுகாப்பது உண்மைதான். ஆனால் குதிக்கால் பெருமளவு நரம்பு முடிச்சுகளை கொண்ட பகுதி. நெருப்பின் தாக்கம் நரம்புகளுடான நோ உண÷வு என்பதிலும் பா÷க்க தோல் எரிந்து புண்ணாவது (நரம்புகள் இல்லாத இடங்களிலும் கூட) என்ற வகையிலேயே பெரியபாதிப்பை தரவல்லது. தீ மிதிப்பவ÷கள் அதற்கு ஆளாவது குறைவு.

