Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்
#1
அக்டோபர் 26, 2004

<b>தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்

மதுரை:</b>

தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் நிறுவியுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரையில் இரண்டு நாள் தமிழ் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்துள்ளது. தமிழைக் காக்க தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழும், அதன் பண்பாடும் சிதிலமடைய தமிழ் சினிமாக்களே முக்கிய காரணம்.

அதேபோல தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழிகளுக்கு அளிக்கப்பட்ட ஆதரவும் தமிழ் பாதிக்கப்பட இன்னொரு முக்கிய காரணம். இந்த மொழிகளை கற்றுத் தருவதை தமிழக பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழைத் தவிர வேறு மொழி இருக்கக் கூடாது என்று பாரதியாரே அன்று போராடியுள்ளார். அதற்காக இயக்கம் நடத்தியுள்ளார். எனவே எங்களது இயக்கத்தில் எந்தத் தவறும் இல்லை என்றார் ராமதாஸ்.

பி.டி.ஆர். பேச்சு:

முன்னாள் சபாநாயகரும், திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசுகையில்,

தமிழுக்காக மிகப் பெரிய வேலையில் ராமதாஸ் இறங்கியுள்ளார். சுத்தமான பச்சைத் தமிழர்கள் இந்த பணியை வரவேற்பார்கள். தமிழைப பாதுகாக்க ராமதாஸ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே, பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழைக் காக்க களம் கண்டுள்ளார். தமிழுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி வருவதில் தவறே இல்லை.

மாநிலம் முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

thatstamil.com
Reply


Messages In This Thread
தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ் - by hari - 10-26-2004, 08:17 AM
[No subject] - by hari - 10-26-2004, 08:43 AM
[No subject] - by சாமி - 10-26-2004, 02:22 PM
[No subject] - by aathipan - 10-28-2004, 10:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)