07-25-2003, 04:13 PM
sharish Wrote:<b>முகமூடித் திருடர்கள்...!</b>
அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
தயவுசெய்து நாங்கள் அவர்களை
யாரென்று குறிப்பிட வேண்டாம்...!
ஏனெனில் அவர்கள்...
மனிதம் இல்லாதவர்கள்
இதயம் இல்லாதவர்கள்
அவர்கள் பெயர்களை
குறிப்பிட வேண்டாம்
ஏனெனில்...
புனிதமாய் இருக்கிறது எங்கள் நா
அவர்கள் பெயரை உச்சரித்து
அசுத்தம் செய்ய...
நாங்கள் விரும்பவில்லை
ஆகையினால் நாங்கள்
அவர்கள் நாமங்களை
உச்சரிக்க வேண்டாம்...!
த.சரீஷ்
21.07.2003(பாரீஸ்)
வணக்கம் சரீஷ். காலத்தின் தேவையறிந்து தந்த அருமையான கவிதைக்கு நன்றி. உரியோனுக்கு உச்சியில் உறைக்க வேண்டும். உறைக்குமா.....?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

