10-26-2004, 03:09 AM
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/unanpu_en_manathil_aazamaay.jpg' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>உன் அன்பு என் மனதில் ஆழமாய்..!</b>
அருகில் இருந்தால் இல்லாத அன்பு
தொலைவில் இருக்கிறது.
அருகில் இருப்பவர்களிடம் கிடைக்காத அன்பு
தொலைவில் இருக்கும் உன்னிடம் இருந்து கிடைகிறது.
அன்பாய், ஆசையாய், அழகாய்
நீ அழைக்கும் அழகு
என் காதில் காதல் பேசுகிறது.
நீ பேசும் மொழியே கவிதை
நான் பேசும் கவிதைகளோ கற்பனை.
நீ பார்க்கும் பார்வையில்
பல அர்த்தங்கள் பரிணமிக்கும்.
நான் பார்க்கும் பார்வையிலோ
பல கோபங்கள் பரிணமிக்கும்.
பாசத்தின் உச்சத்தில் நீ பேசுவதும்
கோபத்தின் உச்சத்தில் நான் பேசுவதும்
பழகி போன ஒன்றாக எம் வாழ்வில்
பல்லாங்குழி ஆடுகின்றன.
சோகத்தில் நீ இருக்கும் போது
பாசத்தை தர நான் அருகில் இல்லை
மகிழ்ச்சியில் நீ திழைக்கும் போது
உன் மகிழ்ச்சியில் மனம் மகிழ நான் உன்னோடு இல்லை.
மாற்றங்கள் வாழ்வில் வந்து வந்து போனாலும்
எம் மாற்றிடங்கள் ஒன்று சேர
மாதங்கள் பல காக்க வேண்டிய கட்டாயம்.
உன்மடல் கண்டேன்
உன் மனம் அறிந்தேன்.
உன் நலம் அறிந்தேன்
உனக்கொரு மடல் வரைந்தேன்...
உன் அடுத்தமடலுக்காய் காத்திருக்கிறேன்..
என்றும்
உன் அன்பின்
[காதலன்[காதலி]
நன்றி
கவிதன்
18/10/2004
மாலை 5.12
http://kavithan.yarl.net/
[u][size=18]<b>உன் அன்பு என் மனதில் ஆழமாய்..!</b>
அருகில் இருந்தால் இல்லாத அன்பு
தொலைவில் இருக்கிறது.
அருகில் இருப்பவர்களிடம் கிடைக்காத அன்பு
தொலைவில் இருக்கும் உன்னிடம் இருந்து கிடைகிறது.
அன்பாய், ஆசையாய், அழகாய்
நீ அழைக்கும் அழகு
என் காதில் காதல் பேசுகிறது.
நீ பேசும் மொழியே கவிதை
நான் பேசும் கவிதைகளோ கற்பனை.
நீ பார்க்கும் பார்வையில்
பல அர்த்தங்கள் பரிணமிக்கும்.
நான் பார்க்கும் பார்வையிலோ
பல கோபங்கள் பரிணமிக்கும்.
பாசத்தின் உச்சத்தில் நீ பேசுவதும்
கோபத்தின் உச்சத்தில் நான் பேசுவதும்
பழகி போன ஒன்றாக எம் வாழ்வில்
பல்லாங்குழி ஆடுகின்றன.
சோகத்தில் நீ இருக்கும் போது
பாசத்தை தர நான் அருகில் இல்லை
மகிழ்ச்சியில் நீ திழைக்கும் போது
உன் மகிழ்ச்சியில் மனம் மகிழ நான் உன்னோடு இல்லை.
மாற்றங்கள் வாழ்வில் வந்து வந்து போனாலும்
எம் மாற்றிடங்கள் ஒன்று சேர
மாதங்கள் பல காக்க வேண்டிய கட்டாயம்.
உன்மடல் கண்டேன்
உன் மனம் அறிந்தேன்.
உன் நலம் அறிந்தேன்
உனக்கொரு மடல் வரைந்தேன்...
உன் அடுத்தமடலுக்காய் காத்திருக்கிறேன்..
என்றும்
உன் அன்பின்
[காதலன்[காதலி]
நன்றி
கவிதன்
18/10/2004
மாலை 5.12
http://kavithan.yarl.net/
[b][size=18]

