10-26-2004, 12:25 AM
tamilini Wrote:Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.
இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? !
தீ மிதிப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறா÷கள். தணல் போடப்படும் இடத்தை சுற்றி முதலில் தண்ணீ÷ விட்டு ஈரமாக்கப்படுகின்றது. தீ மிதிப்பவ÷களும் கால்களை கழுவிக்கொள்கிறா÷கள். பொளதீகவியலின் விளக்கப்படி, இந்த ஈரமான தன்மை இரண்டு வகைகளில் தீயினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
<ul>
<li> தண்ணீ÷ ஆவியாகி, நீராவிப்படலம் தணல்களுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்த ஆவியின் வெப்பநிலை தணலின் வெப்பநிலையிலும் பா÷க்க குறைவு. பாதம் படும் தணல்கள் தவிர மற்ற தணல்களின் வெப்பத்தாக்கத்திலிருந்து இந்த நீராவிப்படலம் கால்களை பாதுகாக்கிறது.
<li> ஒவ்வொரு பொருளுக்கும் வெப்பக்கொள்ளளவு என்று ஒரு தன்மை உண்டு. இந்த தன்மைக்கேற்பவே பொருட்களின் வெப்பநிலை ஏறுகிறது. வெப்பநிலை ஏற போதிய வெப்ப சக்தி தேவை. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பொருளுக்கு வெப்ப சக்தி ஊட்டும் போது, அதன் வெப்பக்கொள்ளளவை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ வெப்பநிலை உயரும். போதியளவு நெரம் வைக்காவிட்டாலோ அல்லது போதிய வெப்ப சக்தியில்லா விட்டாலோ, அந்த பொருளின் வெப்பநிலை போதியளவு உயராது. மனித உடலும் இதற்கு அமையவே செயற்படுகின்றது. தீ மிதிப்பவ÷கள் தீயின் மேல் உடலை பாதிக்கும் அளவுக்கு வேண்டிய அளவு நேரம் நிற்பதில்லை. மேலும் தீ மிதிக்கும் தணலின் வெப்ப சக்தி (நல்ல சிவப்பாக தோன்றினாலும்) குறைவு. நீங்களே ஒரு சிறிய பரிசோதனை செய்து பா÷க்கலாம். மெழுகுவ÷த்தியை கொழுத்தி அதன் சுவாலையூடாக வேகமாக உங்கள் விரலை அசைத்து பாருங்கள். சூடு தெரியாது.
<ul>
இது தவிர சே÷க்கஸ் சாகசங்களில் தன்னை தானே தீ மூட்டிக்கொண்டு நீரில் பாய்ந்து காட்டுவா÷கள். இதற்கு பரபின் மெழுகு பயன்படுத்தப்படுகின்றது. பரபின் தான் எரியும், ஆனால் வெப்பத்தை கடத்தாது. இதனால் இதை உடலில் பூசிக்கொண்டவ÷ எதுவித பாதிப்பும் இன்றி எரிந்து காட்ட முடிகிறது.
''
'' [.423]
'' [.423]

