10-25-2004, 10:22 AM
Sriramanan Wrote:Quote:சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....!தனியக் கும்பிடுட்டு விட்டீங்களெண்டா உங்களிற்கு பயிற்சி கிடைக்குது எண்டு சந்தோசப்படுவன். ஆனால் நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.
நீங்கள் தான் கடவுள் இல்லை எண்டுறிங்கள். குப்பிடுறது மூட நம்பிக்கை எண்டுறிங்கள். கக்கூசுக்கை கடவுள் இல்லை எண்டுறிங்கள்.... இப்படி எல்லாம் சொல்லி, மூட நம்பிக்கையை நம்பிறவை மூடர் எண்டு சொல்லுறிங்கள்.... மூடர் எண்டால் உங்களை மாதிரி அறிவாளிகளோ முற்போக்கு சிந்தனையாளரோ சொன்னா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூட யோசிக்கமுடியாத முட்டாளாக ஏன் இவ்வளவு வில்லங்கப் படுகிறீர்கள் எண்டு தான் விளங்கவில்லை.
எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது.... நீங்கள் நல்லா எங்கேயோ ஏமாத்துப்பட்டுடிங்கள்... உங்களின் ஏமாற்றம் தான் இப்படியொரு விரக்தியை வர வைக்குது போல இருக்கு...
சரி சரி...உண்மையைச் சொல்லுங்கோ...
நீங்கள் பரீட்சைக்கு படிக்காமல் சரஸ்வதி புூசையில புத்தகத்தை வச்சு தேவாரம் பாடி அவல் கடலை சாப்பிட்டுட்டு கும்பிட்டுட்டு சரஸ்வதி படிப்பா எண்டு திரிய, பாடங்கள் நல்லா கொட்டுபட்டுது போல இருக்கு....
உங்கை, "இவ்வளவு நாளும் கல்லைக் கும்பிட்டேன் மண்ணை கும்பிட்டேன், இப்பதான் நான் தெளிஞ்சு ஞானம் பிறந்தது" எண்டு பிதட்டி கொண்டு திருயிறவை எல்லாரும் ஏதோ ஒரு வகையிலை நல்லா கடவுளை நம்பி ஏமாந்தவை....
ஒரு சமய நு}லும் கடவுளை கும்பிட்டுட்டு நித்திரை கொள்ளுங்கோ, கூரையைப் பிச்சுக்கொண்டு கொட்டுணும் எண்டு சொல்லவில்லை... இல்லை நெருப்பில நடவுங்கோ, காவடி ஆடுங்கோ, தலை கீழா நில்லுங்கோ, யேசுவேவேவே எண்டு முழங்கலிலை இருங்கோ, அல்லல்லாhhh எண்டு குப்பிற படுங்கோ எண்டும் சொல்லவில்லை.....அப்படியானவற்றை செய்யும் போது செல்வ் கொன்றோல்(self control) எண்டது வருமெண்டால் அதொரு நல்ல பயிற்ச்சி எண்டு தான் சொல்லுவேன்.

