Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
றோவின் தயவில் தேசத் துரோகக் கும்பல் ஒன்றின் உதயம்...!
#30
இன்றைய ஞாயிறு "தினக்குரல்" வாரமலரில் பாதுகாப்பு நிலமை தொடர்பான கட்டுரை........


<b>கருணாவை வைத்து காய்நகர்த்தல்

மீண்டும் நேரடிýயாக 'றோ"வின் தலையீடு?

மட்டக்களப்பில் கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அடுத்தடுத்து படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த வாரம் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு சார்பில் போட்டிýயிட்டு வெற்றி பெற்ற கிங்ஸ்லி இராஜநாயகத்தின் கொலையும் அடங்கும். இந்தக் கொலையுடன் மக்கள் மத்தியில் பீதியும் அச்சமும் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பில் கருணாவின் கட்சி என்ற போர்வையில் சில நடவடிýக்கைகள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருணாவின் கட்சியின் பெயரால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரே சீருடையில் இந்தப் பிரசுரத்தை விநியோகித்துள்ளனர். பொதுமக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாத போதிலும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு ஐயங்களும் இதன் மூýலம் நீங்கியுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு நகருக்குள்ளும் புறநகர் பகுதியிலும், இராணுவ முகாம்களுக்கு அருகிலும் பொலிஸ் காவல் நிலைகளுக்கு அருகிலும் பிரதான வீதிகளில் கருணாவை கடுமையாகச் சாடிý பெயின்ற்களால் சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை தினமும் பெருமளவு மக்கள் பார்வையிடுகின்ற அதேநேரம், படைமுகாம்களுக்கும் பொலிஸ் காவல் நிலைகளுக்கும் அருகில், பிரதான வீதிகளில் ஆற அமர இருந்து எவ்வாறு கருணா குழுவுக்கு எதிராக பெயின்ற்களால் சுலோகங்களை எழுத முடிýந்தது என்ற கேள்வியும் பிறக்கிறது.

மட்டக்களப்பு நகரிலும் புறநகர்ப் பகுதியிலும் மட்டுமல்லாது தூர இடங்களிலும் ஒரே நாளில் ஒரு இரவில் வீதிகளில், அதுவும் படைத் தரப்பு நிலைகளுக்கு அருகில் கருணாவுக்கு எதிராக எழுதப்பட்ட சுலோகங்களுக்கு பின்னணியில் படையினர் இருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். தொட்டிýலையும் ஆட்டிýப் பிள்ளையையும் கிள்ளிவிடுவது போன்ற செயல்களில் இவர்கள் இறங்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், வரிக்கு வரி எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையுமுள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை நகரின் பல்வேறு பகுதிகளிலும் படையினரே சீருடையில் விநியோகித்ததால் இந்தப் பிரசுரத்தை அவர்களே எழுதி அச்சிட்டிýருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஏற்கனவே ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டிý.எல்.எவ்.) யுடன் இணைந்து கருணா தனது கட்சியை அமைத்துள்ளதுடன் இவ்விரு கட்சிகளும் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற கூýட்டணி ஒன்றையும் அமைத்துள்ளன. ஆனாலும் கருணா குழுவைப் போன்றே ஈ.என்.டிý.எல்.எவ்.விலும் விரல் விட்டு எண்ணக் கூýடிýயவர்களே அங்கம் வகிப்பதால் இக்கட்சிகளின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே செயற்படவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரை காலமும் இலங்கைப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிýத்து வந்த இந்தியா, இலங்கை- இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிýன் மூýலம் அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவ ரீதியிலும் இலங்கை விவகாரங்களில் நேரடிýயாகத் தலையிடவுள்ளது. இதற்கு முன்னோடிýயாகவே 1980 களின் நடுப்பகுதியில் இந்திய உளவுத்துறையின் (றோ) ப10ரண ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஈ.என்.டிý.எல்.எவ். கருணா குழுவுடன் சேர்ந்துள்ளது.

இலங்கை- இந்திய உடன்பாட்டுடன் இந்தியப் படைகள் இலங்கை வந்த போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையும் ஈ.என்.டிý.எல்.எவ்.பையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டது போன்று, இலங்கை- இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுடன் கருணா குழுவையும் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் புலிகளுக்கெதிராகப் பயன்படுத்த "றோ' மீண்டும் முனைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தியப் படை இலங்கைக்கு வந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் ஈ.என்.டிý.எல்.எவ்.வும் இந்தியப் படையுடன் வடக்கு, கிழக்கிற்குள் நுழைந்தன. மக்களை அச்சுறுத்தும் விதத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மக்களை அச்சுறுத்தும் விதத்தில் இவர்களது செயற்பாடு அமைந்தது. அதுபோன்றே தற்போது மட்டக்களப்பிலும் அடுத்தடுத்து புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மட்டக்களப்பு கல்வியங்காட்டுப் பகுதியில் தமிழ் தேசியக் கூýட்டமைப்பின் முக்கியஸ்தர் கிங்ஸ்லி இராஜநாயகம் சுட்டுக் கொல்லப்பட்டார். கருணா குழுவே இவரைக் கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு கட்டமே கிங்ஸ்லி இராஜநாயகத்தின் கொலையாகவுமிருக்கலாமெனக் கருதப்படுகிறது.

ஆனாலும், மட்டக்களப்பில் ஏதாவது கொலைகள் நடைபெற்றால் அதற்கான பழி உடனடிýயாகவே விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டு விடுகிறது. கடந்த வாரம் புலிகளுக்கு நெருங்கியவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட போதும் அப்பழியையும் புலிகள் மீது படைத்தரப்பு சுமத்தியது. ஆனாலும், தேச விரோதிகளாலே இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூýறி அவர்களைப் புலிகள் நாட்டுப்பற்றாளர்களாகவும் அறிவித்தனர்.

இதேநேரம், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கும் கருணாவுக்கும் அவ்வளவு தொடர்பு இல்லையென்றும் றோ மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கருணாவைப் பயன்படுத்தி இக்கட்சியை ஆரம்பித்து அதற்குள் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் ஊடுருவ வைத்துள்ளதாகவும் கூýறப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக பெரும் சவால் விடுத்த கருணாவால் ஏன் தனித்து கட்சி அமைக்க முடிýயாத நிலை ஏற்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.

கருணாவின் முக்கிய சகாக்களெல்லோரும் கொல்லப்பட எஞ்சியிருக்கும் அவரது குழுவை, இராணுவப் புலனாய்வுப் பிரிவே தனது கட்டுப்பாட்டிýல் வைத்து இயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அதேநேரம் கருணா குழுவின் கட்சியின் பெயரிலும் விடுதலைப்புலிகள் என்று வர வேண்டுமென்பதும் இவர்களது திட்டமாகும். கருணா தொடர்ந்தும் கொழும்பில் படை முகாமொன்றினுள் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எல்லாமே தலை கீழாகி விடுமென்று இவர்களது எண்ணம்.

அதேநேரம், கருணாவால் இனி ஒரு போதும் தனித்துச் செயற்பட முடிýயாதென்பதும் அனைவரும் அறிந்தது. இதனால் தான் கருணாவைத் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டு வருவதற்காக அவரது கட்சியில் ஈ.என்.டிý.எல்.எவ்.வை சேர்ந்தவர்களையும் புகுத்தி அதேநேரம் கருணாவின் கட்சியுடன் ஈ.என்.டிý.எல்.எவ்.வை இணைத்து தமிழீழ மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதனையும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளனர்.

கருணா இன்று ஒரு கைதியைப் போல் படைமுகாம் ஒன்றில், வைக்கப்பட்டிýருப்பதால் அவரால் எதுவுமே செய்ய முடிýயாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெயரையும், அவர் அமைத்ததாகத் கூýறப்படும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதுமான நடவடிýக்கையில் இறங்குவார்களென்றும் எதிர்பார்க்கப்படும் அதேநேரம் இவர்களது அனைத்துச் செயற்பாடும், கிழக்கில் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதுடன் அங்கு பிரதேசவாதத்தையும் கிளறி விடுவதுமாயிருக்கப் போகிறது.

ஆனாலும், வடபகுதித் தலைமை கிழக்கை அடக்கியாள முற்படுகிறது. வடபகுதித் தலைமையை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடிýயாதெனக் கூýறியே கருணா விடுதலைப் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆனால் கருணா இன்று அமைத்துள்ள கட்சியின் செயலாளர் வடபகுதியைச் சேர்ந்தவர். அவர் கூýட்டுச் சேர்ந்துள்ள ஈ.என்.டிý.எல்.எவ்.வும் வடபகுதித் தலைமையையே கொண்டுள்ளதால் பிரிவதற்கு மட்டும் பிரதேச வாதம், கூýட்டுச் சேர்வதற்கு எல்லாம் மறந்து விட்டதா அல்லது பின்னணியில் இருப்பவர்களின் விருப்புக்காக இவரும் அவர்களுடன் சேர்ந்து விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆரம்பத்தில் கருணா புரட்சி செய்த போது, இந்தியாவின் பின்னணி குறித்து அவ்வளவாக ஊகங்கள் எழாவிட்டாலும் தற்போதைய கருணாவின் கட்சியின் பின்னாலும் அவரது கட்சியுடன் கூýட்டுச் சேர்ந்தவர்களின் பின்னாலும் றோ இருப்பதாகக் கூýறப்படுவதால் கருணாவின் கிளர்ச்சியின் பின்னணியிலும் றோ இருந்திருக்கலாமென்ற ஊகங்கள் எழுகின்றன.

அதேநேரம் கருணா மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணாவின் பேட்டிýகளை தமிழ் ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனம் (ரி.பி.சி.) லண்டனிலிருந்து அடிýக்கடிý ஒலிபரப்பியது. அண்மையிலும் கட்சி அமைக்கப் போவதாக அவர் கூýறியதை ஒலிபரப்பியது. ஆனால், கருணா புதிய கட்சியை அமைத்து விட்டதாகக் கூýறியபின், இதுவரை கருணாவின் பேட்டிý ரி.பி.சி.யில் ஒலிபரப்பாகவில்லை.

ரி.பி.சி. வானொலியை லண்டனிலிருந்து இயக்கும் ராம்ராஜ், ஈ.என்.டிý.எல்.எவ். வின் சர்வதேச அமைப்பாளர். இவரே கருணாவைப் பேட்டிý கண்டு ரி.பி.சி.யில் ஒலிபரப்பி வந்தார். ஆனால், ஈ.என்.டிýல்.எல்.எவ். உடன் கருணா கூýட்டுச் சேர்ந்த பின் அவரது பேட்டிý ரி.பி.சி.யில் ஒலிபரப்பாகாததும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையை விட்டு தப்பிச் சென்று எங்காவது ஒரு நாட்டிýல் தஞ்சமடைவது தான் கருணாவின் நோக்கமாயிருப்பதாக ஆரம்பத்தில் கூýறப்பட்டது. ஆனாலும், அதற்கு அவருக்கு இடமளிக்கப்படவில்லை.

கருணாவை வைத்துக் கொண்டுதான் கருணாவின் பெயரில் புலிகளுக்கெதிராக எதனையும் செய்ய முடிýயுமென்பது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நோக்கம். அதனால் அவரை விட்டுவிட்டால் எதுவுமே செய்ய முடிýயாது என்பதும் அவர்கள் அறிந்த விடயம். இதனாலேயே அவரை இங்கு வைத்துக் கொண்டு, அவரது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்தது, அவரது பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்து கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிýக்கைகள் மூýலம் அங்கு தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.

இந்தப் பின்னணியில் இவர்களுடன் 'றோ"வும் சேர்ந்துள்ளதால் வடக்கு - கிழக்கைப் பிரித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும் நடவடிýக்கைகள் இனி முனைப்படைந்துவிடும், இதற்கான வசதி வாய்ப்புகளை இலங்கை அரசு ஏற்படுத்திவரும் சூýழ்நிலையில் கருணாவின் கட்சியின் பெயரால் இராணுவத்தினரே துண்டுப் பிரசுரங்களை அச்சடிýத்து அவர்களே அவற்றை மக்களுக்கும் விநியோகித்து வருகின்றனர்.

ராஜீவின் கொலையின் பின்னர் இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிýத்து வந்த இந்தியா, தற்போது இலங்கைச் சமாதான முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையிலிருக்கையில் அதனை நீக்கி மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உதவி செய்யாது இலங்கைப் படையினருக்கு முற்று முழுதாகப் போர்த்தளப்பாடங்கள் அனைத்தையும் வழங்கும் விதத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிýல் கைச்சாத்திடவுள்ளமை அவர்களது நோக்கத்தை நன்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

நிலைமைகள் இவ்வாறிருக்கையில் கருணாவுக்கு இனி கிழக்கில் இடமில்லை என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. ஏற்கனவே கிழக்கை தமிழர்களிடமிருந்து பறிப்பதற்கான குடிýயேற்றத் திட்டங்கள் வேகமாக அமுல்படுத்தப்பட்டு தமிழர்களின் தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகையில் கருணாவின் செயற்பாடுகள், மட்டக்களப்பிலும் தங்கள் இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடுமென்பதை தமிழ் மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.

பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும் சொந்த இனத்தைக் காட்டிýக் கொடுத்து சுகபோகம் தேட பலர் முனைந்துள்ளதை மட்டக்களப்பு மக்கள் நன்கறிவர். வடக்கு - கிழக்கு நிரந்தர இணைப்பிலேயே கிழக்கு மக்களின் தாயகப் பிரதேசங்கள் உறுதிப்படுத்தப்பட்டிýருக்குமென்பதையும் அவர்கள் நன்குணர்வர். தமிழ் மக்களின் பலத்தின் அடிýப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு ஓடோடிý வந்தது. பேச்சுக்களும் நடைபெற்று பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பு எப்படிýப் பேரம் பேசுகின்றதென்பதையும் அந்தப் பேச்சுக்களில் நேரில் கலந்துகொண்டு நன்கறிந்த பின்பும், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தது போல் செயற்பட்டு எல்லாவற்றையும் போட்டுடைத்து விட்டு கிழக்கு மக்களை மீண்டும் ஆரம்பத்திற்குக் கொண்டு போகும் முயற்சியில் கருணா ஈடுபட்டுள்ளதை அந்த மக்கள் நன்கு புரிந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.</b>
" "
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-13-2004, 08:36 PM
[No subject] - by kuruvikal - 10-13-2004, 09:05 PM
[No subject] - by kuruvikal - 10-13-2004, 09:10 PM
[No subject] - by Sabesh - 10-13-2004, 09:37 PM
[No subject] - by cannon - 10-13-2004, 10:13 PM
[No subject] - by yarl - 10-13-2004, 11:34 PM
[No subject] - by kavithan - 10-13-2004, 11:43 PM
[No subject] - by Nitharsan - 10-14-2004, 01:06 AM
[No subject] - by cannon - 10-14-2004, 01:40 AM
[No subject] - by cannon - 10-14-2004, 01:52 AM
[No subject] - by hari - 10-14-2004, 06:50 AM
[No subject] - by kuruvikal - 10-14-2004, 12:54 PM
[No subject] - by Nitharsan - 10-14-2004, 05:21 PM
[No subject] - by cannon - 10-14-2004, 06:20 PM
[No subject] - by kavithan - 10-15-2004, 10:32 PM
[No subject] - by kuruvikal - 10-16-2004, 01:26 AM
[No subject] - by Vannam - 10-16-2004, 07:09 AM
[No subject] - by kuruvikal - 10-16-2004, 10:47 AM
[No subject] - by cannon - 10-17-2004, 06:40 PM
[No subject] - by cannon - 10-18-2004, 10:53 PM
[No subject] - by TMR - 10-20-2004, 11:49 AM
[No subject] - by kirubans - 10-20-2004, 08:57 PM
[No subject] - by Nellaiyan - 10-21-2004, 10:45 PM
[No subject] - by cannon - 10-22-2004, 12:55 PM
[No subject] - by ThamilMahan - 10-22-2004, 08:11 PM
[No subject] - by Sabesh - 10-22-2004, 08:41 PM
[No subject] - by cannon - 10-24-2004, 11:16 AM
[No subject] - by cannon - 10-24-2004, 07:15 PM
[No subject] - by cannon - 10-24-2004, 09:13 PM
[No subject] - by கறுணா - 10-25-2004, 05:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)