10-24-2004, 09:56 AM
இதில் எனது பதில் கருத்துக்களை முன்வைக்க நேரம் கிடைக்கவில்லை மன்னிக்கவும். காரணம் ஏழைகளுக்கு பூவும் விபூதியும் பணக்காரர்களுக்கு தங்க சங்கிலி, மோதிரம் கொடுக்கும் அந்த பெரிய மகான் சத்திய சயி பாபா பற்றி ஒரு cd தாயாரித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் மாயாயலங்களை புட்டுபுட்டு வைக்கும் பல video clips இனையத்தில் இருந்து தரையிரக்கிவைத்துள்ளேன்.
சோதிட புரட்டு என்ற தொடர் கட்டுரையின் ஆசிரியர் திரு. நக்கீரன் அவர்களின் கருத்தில் சில பகுதியை தருகிறேன். அவரின் கருத்துக்கு நான் 100 விகிதம் உடன்பாடு உள்ளவன். நிச்சியம் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய தொடர்.
தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைக்குரிய நிலத் தெய்வங்களையே வணங்கினார்கள். ஊரின் ஒரு கோடியில் மரத்தின் கீழ் தூண் நட்டு அதில் தெய்வ உருவம் பொறித்து வணங்கினார்கள். ஆடு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்தார்கள்.
போரில் விழுப்புண்பட்டவர்களுக்கு ஊர்ப்புறத்தே நடுகல் நட்டு வணங்கினார்கள். மறக்குடிப் பிறந்த மக்கள் நெல்லை உகுத்துப் பரவும் கல்லைத் தொழுவதன்றி வேறு கடவுளை வணங்கா இயல்புடையோர் என சங்கப் புலவர் மாங்குடி கிழார் சொல்கிறார்.
ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலவே - (புறம் 335)
சைவம் வடபுலத்தில் பிறந்து தென்புலத்தில் பரவி வளர்ந்ததாகும். அது மூவாயிரம் ஆண்டு பத்தாயிரம் ஆண்டு பழமையுடையது என்பது வெறும் புனைந்துரை. மொகெஞ்சொதரோவில் ஆசனமிட்டு தலையில் வளைந்த எரும்மைக் கொம்புளோடு யோகத்தில் அமர்ந்திருப்பது போல கண்டெடுக்கப்பட்ட உருவம் சிவனுடையது என்றும் சிவ வழிபாடு அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதும் வெறும் புனைந்துரையே.
அன்றைய வைதீக மதம் சங்க காலத்தின் இறுதியிலேயே தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கியது. வெள்ளை நிறத்தவரான ஆரியர் தம்மை நிலத்தேவர் என்றும் தம் மொழி தேவ மொழி என்றும் கருப்பு நிறத்தவரான தமிழ் மன்னர்களை ஏமாற்றி நம்ப வைத்தனர். இதனால் போர் புரியாமலே திராவிடரை வெல்லவும், அவர்களை வர்ணங்களாகப் பிரித்து அடிமை கொள்ளவும் கொள்ளவும் செய்தனர். 'மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்பதற்கு ஒப்ப பொதுமக்களும் மூவேந்தர் வழி சென்றனர்.
சங்க காலத்தில் தொழில் அடிப்படையில் பிரிவு இருந்தது. பிறப்பு அடிப்படையில் பிரிவு இருக்கவில்லை. தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்கள் குடிகள் என அழைக்கப்பாட்டனர்.
கிறித்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்து சமயக் கோய்pல்களும் உருவ வழிபாட்டு முறைகளும் பரவின. சிலப்பதிகாரம் காமன், பலதேவன், இந்திரன் போன்றோருக்கு கோட்டங்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது. பின்னர் அது வழங்கொழிந்து போனது. முருகனை மட்டுமே தமிழ்க் கடவுள் என்று குறிப்பதன் மூலம் எஞ்சியவர்கள் தமிழ்க் கடவுளர் அல்லர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.
அரிது அரிது மானிடப் பிறப்பு அரிது என்றார் அவ்வையார். எனவே அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பிறப்பிலேயே நாம் செம்மையாக வாழ வேண்டும்.
நாம் வாழும் உலகம் சங்கரர் சொல்வதுபோல் மாயை அல்ல. புத்தர் சொல்வது போல் துன்பம் நிறைந்ததும் அன்று. சமணமதம் துறவை வற்புறுத்துகிறது. இந்து மதம் சொல்வது போல் ஒருவன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைப் படி பிரமனால் படைக்கப்படுகிறான் எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதும் உண்மையன்று.
துறவறத்தையும் மறுபிறப்பையும் கர்மவினையையும் வற்புறுத்திய இந்த சமயங்களால் தமிழர் போர்க்குணத்தை இழந்தார்கள். எதிரிகளோடு போராடி வெல்லாது அவர்களோடு இசைந்து செல்லும் சாதுக்களாக மாறினார்கள். ஏழ்மையை எதிர்த்துப் போராடாது அது விதி என்று அமைதியடைந்தார்கள். காணும் உலகியல் வாழ்க்கை சிற்றின்பம் எனவும் காணாத மறுவுலக வாழ்க்கை பேரின்பம் எனவும் சொல்லி தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர்.
உடல் நிலை, மனநிலை, நோய் நிலை, பொருளாதார நிலை அவரவரது மரபுவழி மற்றும் இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அமையும் என்பதற்குப் பதில் முப்பிறப்புக்குத் தக அமையும் என்ற நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ்ப் புலவர்களில் வள்ளுவர் ஒருவரே சிறந்த அறிவியல்வாதி. சமயவாதிகள் கேள்வி கேட்காமல் தாம் சொல்வதை நம்புங்கள் என்று சொல்லும்போது வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அது உண்மையா என்பதை உரைத்துப் பார்ப்பதுதான் அறிவு என்றார். வள்ளுவருக்கு முன் இப்படிச் சொன்னவர் புத்தர் மட்டுமே.
வள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டி. பிற பண்பாட்டுப் படையெடுப்புக்கு வேலி கட்டியவர்.
ஒருவனது பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் செயல்களே காரணம் என்றார். புறக் காரணம் இல்லை என்றார்.
ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆதலால் அது உயிரைவிட மேலானது என்றார்.
'ஒழுக்கமற்ற ஆத்தீகனைவிட ஒழுக்கமுள்ள நாத்தீகன் மேலானவன்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒழுக்கம் பற்றி திருவள்ளுவர் தொடர்ச்சியாக பத்து அதிகாரங்களில் விளக்கிக் கூறுகிறார்.
பிறனில் விழையாமை, பொறையுடமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை தீவினை அச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ்.
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் களவும் பஞ்சமாபாதகம் என்கிறது மணிமேகலை.
கள்ளுண்பவர் நஞ்சுண்பவர் என்கிறார் திருவள்ளுவர். குடியைக் கெடுக்கும் குடிப்ப பழக்கத்திற்கு ஆளானாவர்கள் அதனை விட வேண்டும். புகை பிடிப்பர்களும் அவ்வாறே.
மதங்கள் ஒழுக்கத்தைவிட பக்தியே சிறந்தது என்கின்றன. பகவத் கீதையில் கண்ணன் 'எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னிடம் சரண்புகு. எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்' (கீதை 18-66) என்கிறான்.
அறம் செய்யத் தேவையில்லை. பக்தி செய்தால் போதும். கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்குச் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்டும். சிவராத்திரிக் கதை இதைத்தான் சொல்கிறது.
திருமங்கை ஆழ்வார் நாகபட்டினம் பவுத்தவிகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைக் களவுசெய்து சிறிராங்கம் கோயில் திருப்பணி செய்தார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை வைத்துக் கோயில் கட்டினார்.
பெரியபுராணத்தில் சொல்லப்படும் பல கதைகள் பக்திக்காக எந்த நேர்மையற்ற அநாகரிக செயலையும் செய்யலாம் என்கிறது.
ஒரு நாயனார் தினந்தோறும் சூதாடிப் பெற்ற பணத்தில் கோயில் திருப்பணி செய்தார்.
சிறு தொண்டர் என்ற நாயனார் சிவனடியார் கேட்டுக் கொண்டார் என்பதற்காக தனது பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து விருந்து வைக்க முனைந்தார். இயற்பகை நாயனாரிடம் சிவனடியார் அவரது மனைவியைக் கேட்டபோது அப்படியே தன் மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைக்க முயன்றாராம்.
விவிலிய வேதத்தில் கடவுள் கேட்டதற்கு இணங்க தனது ஒரே பிள்ளையை வெட்டிப் பலிகொடுக்க ஏப்ரகாம் முனைந்த கதை கூறப்படுகிறது.
இப்படி ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும், அறிவிற்கும் மாறான மதங்கள் நம் வாழ்வுக்கு பயன்படுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் வருவாயில் இரண்டு விழுக்காட்டை அறச் செய்கைகளுக்குச் செலவிடுங்கள். சாநாள் வரும் வரை காத்திருக்காதீர்கள்.
அறம் எனப்படுவது மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் கொடுத்தல் அல்லது வேறில்லை என்கிறது மணிமேகலை. மேலும் மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறார்.
ஆனால் பாரதியார் இன்னும் ஒரு படி மேலே சென்று-
தெய்வம் பல பல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாயினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்கிறார்.
அறம் என்பது மனத்துக் கண் மாசிலன் ஆதல். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம். பொறாமை, அவா, கோபம், கடுஞ்சொல் இந் நான்கும் கடிந்து நடத்தல் அறமாகும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும் (298)
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278)
வழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் (280)
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால் ( 972)
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (616)
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் (625)
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (322)
திருக்குறளில் உள்ள மருந்து அதிகாரத்தைப் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நலம் நீங்கள் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை, போதிய உறக்கம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.
அர்ச்சனை அபிசேகம் தேர்த் திருவிழா செய்தால் பாவம் கரையும் மறு உலகம் கிடைக்கும் என்றோ பிரார்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. அதனால் சமயவாதிகள் தீக்குறளை ஓதோம் என்று சொல்லிவிட்டார்கள்.
'இதெல்லாம் என் விதி! போதாத காலம்" என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடாதீர்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கையும் விடாமுயற்சி.யும் வேண்டும்.
'பிரார்த்தனை, ஆராதனை இவற்றால் பஞ்சம் தீராது. உழைத்தால்தான் பஞ்சம் தீரும். இதற்கு அறிவு, ஆற்றல், நம்பிக்கை இருக்க வேண்டுமம். சில சோம்பேறிகள் இருப்பதால்தான் நாடு எவ்வளவோ பின்தங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் அறியாமைகள், மூடநம்பிக்கைகள் நம் நாட்டில் அப்படியே இருக்கிறது" என்கிறார் கவியரசு வைரமுத்து.
'உண்டால் அம்ம இவ்வுலகம் பிறர்க்கென
வாழுநர் உண்மையானே"
என்று புறநானூறு பேசுகிறது. தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழும் சான்றோர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் தளைத்திருக்கிறது.
மனிதத்தை நேசியுங்கள். குடும்பம் ஒரு கோயில் என நினையுங்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவுங்கள். ஊருக்கு நல்லது செய்யுங்கள். நாட்டுக்கு தொண்டு செய்யுங்கள். தாய் தந்தையரைப் பேணுங்கள். நூல்களைப் படித்து அறிவை விருத்தி செய்யுங்கள். திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
சோதிடம் ஒரு புரட்டு என்பதை அசைக்க முடியாத சான்றுகளை மேற்கோள் காட்டி இக் கட்டுரைத் தொடரை எழுதியுள்ளேன். படித்தவர்கள் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தமிழர்கள் பகுத்தறிவோடு வாழ வேண்டும். அறிவியல் பண்பாட்டுத் தளங்களில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். தோதிடம் என்பது மூடத்தனம், அறிவியல் உங்கள் மூலதனம்.
மேலும் படிக்க தமிழ்நாதம்