07-24-2003, 10:03 PM
Quote:[b]<span style='font-size:25pt;line-height:100%'>sOliyAn</span>ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா?
ஏதோ சில பெண்கள் தாம் அதனுள் இல்லை என்றபோக்கில் நின்று எழுதுவதை வைத்து கருத்தகளை கொண்டு செல்லாதீர்கள்.. முடிந்தால் ஆதாரத்துடன் நீங்களும் அடக்குமுறைகளைப்பற்றி கூறுங்கள்.. அல்லது ஏற்கெனவே எழுதியவர்களும் ஆண்களால் தங்களுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதையாவது கூறி ஆதாரப்படுத்தலாமே?!
[b]சாகாவரம்
எழுதியவர் - இராஜன் முருகவேல்
Quote:முதலில் அது சாதாரணமாக இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல அது அவளுக்கு முள்ளாக உறுத்தியது.கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=259
~தன்னையொரு வாழவழியற்றவள்| எனப் பலருக்குப் பறைசாற்றுவதுபோல இருந்தது.
~இதற்காகவா சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டினான்...|
நாட்கள் செல்லச்செல்ல சந்திரனின் சுயரூபம் அவளுக்கு மெல்லமெல்லப் புரிய ஆரம்பித்தது.
'சகுந்தலா.... ~ரொய்லட்|டை வடிவாய்க் கழுவு.... உடுப்பைத் தோய்ச்சு ~அயன்| பண்ணி வை.... சப்பாத்தைத் துடைச்சு வை... தேத்தண்ணி கொண்டு வா... காலைப் பிடிச்சு விடு... பொடியள் வாறாங்கள்- நாலைஞ்சு கறியோடை சமைச்சு வை.... வேலையாலை களைச்சுப்போய் வாறன். உனக்கென்ன வீட்டிலை காலாட்டிக் கொண்டிருக்கிறாய்..."
சீதனமில்லாமல் திருமணம்செய்து வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருக்கத் தீர்மானித்துவிட்டான்போலும்.
அவளால் பெருமூச்சுத்தான் விட முடிந்தது.
Ööö
'சகுந்தலா... ஐஞ்சாறு ~கிளாஸ்| கொண்டு வா..." என்றவாறு உள்ளே நுழைந்தான் சந்திரன்.
கையில் ஒரு துணி ~வாய்க்|. அதனுள் சில போத்தல்கள் சிணுங்கின. அவனைத் தொடர்ந்து ஐந்தாறு பேர்- நண்பர்கள்.
வரவேற்பறையில் இருந்த மேசையில் போத்தல்களை எடுத்து அடுக்கினான்.
'மச்சான்! முதலிலை ~வீடியோ| எடுக்கவேணும். என்னட்டை இருக்குது. நானும் சகுந்தலாவும் ~கேக்|கை வெட்டேக்கை நீ ~சூட்| பண்ணு..."
'பண்ணினால் போச்சு...."
'வடிவாய் எடுக்கவேணும். ஊரிலை அம்மா, மாமா மாமி எல்லாருக்கும் அனுப்பவேணும்.... ஏய் சகுந்தலா.... ~கிளாஸ்| எங்கை?"
'என்ன பொரிச்சனீ..... அதையும் கொண்டு வா..."
சகுந்தலா மௌனமாகப் பரிமாறினாள்.
'உதுக்குத்தான் சொல்லுறது, எங்கடை ஊhர்ப் பொம்பிளையளைக் கலியாணம் செய்யவேணும் எண்டு. வேறை நாட்டுக்காரியளெண்டால் நீ உன்ரை வேலையைப் பார், நான் என்ரை அலுவலைப் பாக்கிறனெண்டு போவிடுவாளவை..." என்றான் பாலன்.
'ஓமோம்.... செல்வம் ஒரு ஜேர்மன்காரியைக் கட்டி படுறபாடுதான் தெரியுமே? காசிருக்கோ இல்லையோ ஒவ்வொரு சனிக்கிழமையும் ~றெஸ்ரோண்ட்|டிலை சாப்பிடவேணும். அவையவேன்ரை வேலையளை அவையவைதான் செய்யவேணும். வேலையாலை வந்து அதை எடு, இதை எடெண்டு அதிகாரம் செய்யேலாது.... எங்கடை பொம்பிளையள் எவ்வளவு மேல்...."
'நான் சீதனம் வேண்டாமையெல்லே கலியாணம் கட்டினனான்..." என்று பெருமையாகக் கூறினான் சந்திரன்.
ஒருநாளைக்கு ஒருமுறையாவது சொல்லாவிட்டால் அவனுக்குத் தலை வெடித்துவிடும் போலும்.
சகுந்தலாவுக்கு அவமானமாகக்கூட இருந்தது. தன் தலைவிதியை நொந்துகொண்டாள்.
'என்ன ~ம்|மெண்டிருக்pறாய்... இண்டைக்காலும் சிரிச்சுக் கொண்டிரன்...."
சிரிக்க முயன்றாள். முடியவில்லை.
[b]மறுவிசாரணை
எழுதியவர் - இராஜன் முருகவேல்
Quote:'நான் நந்தன்...."கதையை முழுமையாக வாசிக்கhttp://www.yarl.com/articles.php?articleId=258
'நந்தனோ...? எனக்குத் தெரியேலை..."
'என்ன அக்கா உப்பிடிச் சொல்லுறியள்?! நான் சின்னையா வாத்தியாற்றை மகன்..."
'ஓ.... ஓ.... தெரியும். தெரியும். என்ன திடீரெண்டு இந்தப் பக்கம்..."
'உதை றோட்டிலை நிக்க வைச்சே விசாரிக்கிறது? கதவைத் திறவுங்கோவன்..."
பிரயாணக் களைப்பு. அவசரத்தில் தேனீரைமட்டும் பருகிவிட்டு வெளிக்கிட்டது. வசந்தியின் வீட்டில் சாப்பிடலாம்தானே என்ற எண்ணம்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை.... அதுவும் பல வருடங்கள் கழித்து வரும் விருந்தினர்களை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு.
சிறிதுநேரம் வசந்தியின் குரலைக் காணவில்லை.
'என்ன அக்கா.... என்ன யோசினை....?!"
'யோசினை இல்லை நந்தன். பயம்..."
'பயமோ...?"
ஆச்சரியத்துடன் கூவினான்.
'எனக்கோ..."
'அவருக்குப் பயம்.... நீர் ரெலிபோன் எடுத்துக்கூடச் சொல்லாமை வந்திட்டீர்...."
'உங்கடை ரெலிபோன் நம்பர் என்னட்டை இல்லை அக்கா..."
'குறை நினையாதையும்.... அவர் இல்லாத நேரத்திலை ஆரையும் வீட்டுக்குள்ளை விடக்கூடாதெண்டு உத்தரவு.... அதுதான் நந்தன். நீர் என்ன நினைப்பீரோ தெரியாது..."
வசந்தியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.
நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் ஒரு நாட்டில் இப்படியொரு கணவன். அவருக்கு இப்படியொரு மனைவி, கூண்டுக்கிளியாக...!!
நாடு மாறினாலும் பாஷை மாறினாலும் உடைகள் மாறினாலும் உள்ளத்தை மாற்ற விரும்பாத மனிதர்கள்.
'அக்கா! அப்ப நான் போவிட்டு வாறன்..."
'கொஞ்சம் பொறும் நந்தன்.... வீட்டுக்குள்ளைதான் கூப்பிட முடியேலை. என்ன விசயமாய் வந்தனீரெண்டு கேக்கலாமில்லையா?"
~நாலு சுவர்களுள் அடைபட்டுக்கிடக்கும் இவளிடம் சொல்லுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?|
யோசித்தான்.
'விருப்பமில்லாட்டால் வேண்டாம்...."
'இல்லை அக்கா... விசயத்தைச் சொல்லி விசாரிக்கத்தானே விடியவெள்ளண்ண எழும்பி இவ்வளவு து}ரம் வந்திருக்கிறன்.... ஆனால் இப்பிடி வாசலிலை நிண்டு கதைக்கிறது புது அனுபவம்..."
'எனக்கு இது பழகிப்போன விதி.... அப்பா அம்மா பெரிசில்லை, காதலன்தான் வேணுமெண்டு நானே என்ரை வாழ்க்கையை அமைச்சுக்கொண்டன். இப்ப பாழாய்ப்போன சந்தேகம்.... அதுக்குப் பயந்து பயந்து வாழவேண்டிக் கிடக்கு...."
'கவலைப்படாதேங்கோ.... காலம் எப்பவும் கஸ்டமாக இருக்காது. அக்கா, எனக்கொரு சம்பந்தம் ஊரிலையிருந்து பேசி வந்தது. பிறக்கறாசியாற்றை மகளாம்.... அவவைப்பற்றி உங்களிட்டை ஏதாலும் விசாரிக்கலாம் எண்டுதான் வந்தனான்..."
'என்னத்தைப்பற்றி விசாரிக்கப் போறீர்? அழகு... குணம்.... படிப்பு... பண்பு... இல்லாட்டில் பணம் காசு...?! நான் சொல்லுறனெண்டு குறை நினைக்காட்டில் ஒண்டு சொல்லுறன்..."
'சொல்லுங்க..."
'உங்கடை தாய் தேப்பன் உங்களுக்கு நல்லதைத்தான் செய்வினம்.... அவையிலை சந்தேகப்படாதையுங்கோ... ஒவ்வொரு மனுசருக்கும் ஒவ்வொரு குறை இருக்கு. ஒருத்தருக்குப் படிப்பு இல்லாட்டில் நல்ல குணம் இருக்கும். பணம் இல்லையெண்டால் நல்ல அழகு இருக்கும். வாழ்க்கைக்கு இதுகளெல்லாம் ஓரளவுக்குத்தான் தேவை... விட்டுக் கொடுத்து வாழுற மனம்தான் முக்கியம்... இண்டைக்கு என்ரை வாழ்க்கையைப் பாருங்கோ... காதலிச்சம்.... படிப்பு ~ரியூசன்| எண்டு தாய் தேப்பனை ஏமாத்திக் காதலிச்சம்.... ஓருயிர் ஈருடல் எண்டமாதிரி.... ஆனால் எல்லாம் கொஞ்சநாள் கவர்ச்சி.... இப்ப கவர்ச்சி போய் சந்தேகம் வந்து நான் ஒரு சிறைப்பறவையாய்.... ஓமோம்.... அவருக்கு என்னிலை சந்தேகம்... அடி உதை... குத்து.... நான் ஆசையாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை. என்ரை 'பாஸ்போட்"கூட என்னட்டை இல்லை. அவர்தான் கொண்டு திரியுறார்.... ஓடீடுவனாம்..."
சுவரில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கியில் வசந்தியின் குரல் விம்மியது.
நந்தனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.
nadpudan
alai
alai


