10-23-2004, 02:32 AM
Quote:நீங்கள் கருத்தே சொல்லவில்லையே பிறகெப்படி தவறாக விளங்கிக் கொள்வது...கருத்தைச் சொல்லாமல் சொன்னேன் என்று கூறியததற்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
கல்வித் தினங்கள் என்று சொல்லி நவராத்திரியில் மூன்று நாட்கள் கல்வியைத் தா சரஸ்வதித் தாயே எனது கல்வியறிவைக் கூட்டு சரஸ்வதித் தாயே என்று கும்பிடுகிறோம். அதனால் எங்களிற்கு எந்தவித பிரியோசனமும் ஏற்படப்போவதில்லை.
Quote:கல்வி மூன்று இயல்களை அடிப்படையாகக் கொண்டது இயல் இசை நாடகம்...அதற்குத்தான் மூன்று தினங்கள்...இப்போ காதலர் தினம் போல...அவை ஒவ்வென்றிற்கும் ஒவ்வொரு தினம்...காதல் - அன்பின் அடிபடையானது எனின் தினமும் இருக்க வேண்டிய உள உணர்வு..அதையே ஒரு நாளிற்கு சுருக்கி இருக்கிறது நவீன உலகம்...வேண்டுமானால் ஒருதலைக் காதல் இருதலைக் காதல் எம் எஸ் என் காதல், எஸ் எம் எஸ் காதல், டேட்டிங் காதல் இப்படிப் பிரிச்சும் கொண்டாடலாம்...அது அறிவுபூர்வமானது இல்லையா...????!
நாங்கள் யாரும் காதலர் தினத்தில் எனக்கு காதல் தா தெய்வமே காதல் தா என்று வேண்டுவதில்லை! ஆனால் நவராத்திரியில் நாம் என்ன செய்திறோம் முதல் மூன்று நாளும் எனக்கு வீரத்தைத் தா துர்க்கையே, அடுத்த மூன்று நாளும் எனக்கு செல்வத்தைத் தா இலச்சுமியே அடுத்த மூன்று நாளும் எனக்கு கல்வியைத் தா சரசுவதியே என்று பிரார்த்திக்கின்றோம். இந்த பிரார்த்தனையைத் தான் மூட நம்பிக்கை என்கிறோம்.
ஆனால் விசய தசமி அன்று ஒரு மழைலைக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கு முயற்சிக்கிறீர்களே அதை நாங்கள் வரவேற்கிறோம். அதை வருசத்தில் ஒரு நாள் என்ன மாத்தில் ஒரு நாள் என்று மாத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

