10-22-2004, 06:43 PM
கனடாவிற்குள் இசைக்குழுவொன்று கச்சேரி நடாத்த வருவதாகக் கூறிக்கொண்டு தென்னிந்தியாவில் இருந்து இசைக்குழுவுடன் பதினைந்து இலங்கைத் தமிழரையும் கனடாவிற்குள் கொண்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி தெரியவருகையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கனடாவிற்கு இசைக்குழு நடாத்துவதாக போட்டோ போஸ்ட் லிமிட்டட் நிறுவனத்தை நடாத்தும் சில்வஸ்ரார் என்பவர் தென்னிந்தியாவிலிருந்து சில நடிகைகளையும் அவர்களுடன் சேர்த்து பல இசைக்கச்சேரி உறுப்பினர்களையும் கனடாவிற்குக் கூட்டி வந்துள்ளார்.
இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தலைமறைவாக இந்திய இராணுவத்துடன் இந்தியா சென்ற ஈஎன்டிஎல்எவ் அமைப்பு உறுப்பினர்கள் 14 பேர் இவரால் இசைக்கச்சேரி உறுப்பினர் என அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தற்போது கனடாநாட்டுப் பொலிசாருக்கும் குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது இதனால் சில்வஸ்டார்மீது சட்டநடவடிக்கை எடுக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நன்றி நிதர்சனம்.