10-22-2004, 03:09 PM
தமிழ் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் உல்லாம் ஒரு காலத்தில் மிக மிக அருமையாக இருந்தார்கள். 1990களில் லண்டனில் பகுதிநேரமாக ஒரு வானொலி வந்தது, பின்னர் அதனை தொடர்ந்து இன்னுமொரு வானொலி பிறகு அதிலையிருந்து பிரிந்து ஒரு வானொலி, பிறகு அதிலையிருந்து பிரிந்து இரண்டு இப்பிடி வானொலிகள் ஐரோப்பாவில் வழர்ந்தமை ஒன்றும் பெரிய வரலாறு அல்ல, மாறாக இது ஒரு சாக்கடையாக மாறியமைதான் மிகவும் வேதனைாயான வியடம். இந்த சாக்கடைக்கள் ஒரு காலத்தில் நாறிய காரணத்தால் என்னவோ தற்போது இந்த வானொலிகளை கேட்பதையே நிறுத்திவிட்டேன். ஊடகம் என்பது மக்களிற்கதகவே ஒளிய ஊடகங்களிற்காக மக்கள் அல்ல என்ற தார்மீகத்தை இந்த ஊடகங்களும் சரி ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள தவறுவதே இன்றைய ஐரோப்பிய தமிழ் சக்கடை ஊடகங்கள் என்ற நிலைமை. அதில் வானொலிகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று அடுக்கி கொண்டு போகலாம். இங்கே நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சாட முனையவில்லை. பொதுப்படையாக சில விடயங்களை எழுதலாம் என்று கருதுகிறேன். ஒரு ஊடக வியலாளன் ஒரு செய்தியை வெளிவிடும் போது அதன் உண்மை, அதை வெளிவிட்ட ஊடகத்தின் நம்பகத்தன்மை போன்றவற்றை ஆரய்வதுடன் முடிந்தளவு சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர் தம் கருத்துகளை எடுக்க வேண்டும். பின்னர் தனது ஆய்வுகை வைத்து மிகவும் நேர்மையான கருத்தை வெளிவிடவேண்டும். இது ஐரோப்பிய எடகங்களில் நடப்பது மிகவும் குறைவு. இணையத்தளம் எப்ப வந்ததோ அண்டையிலையிருந்து சந்தியில் நின்று கதைக்கும் சுப்பண்ணாவும் ஊடகவியலாளர். ஒரு ஊடகவியலாளர் கருத்தியல் ரீதியான தூய்மையயான ஒரு வாராக இருக்க வேண்டும். ஒரு செய்தியையோ அல்லது ஒரு ஆய்வை செய்ய முன் அது பற்றிய முழுமையான ஆய்வை செய்ய வேண்டும். அடிப்படையில் அரசியல் ஆய்வை செய்யும் ஒருவருக்க ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம், பொருளாதாரம், அரசு, மற்றும் அதுசார் பண்புகள் , ஏகாதிபத்தியம், சர்வதேசமயமாக்கல், அரசியல் சட்டம், போன்ற வற்றில் குறைந்த பட்சம் ஒரு எழுந்தாமானமான அறிவாவது இருக்க வேண்டும். அனால் இன்றைய ஐரோப்பிய ஊடகவியலாளர்களில் எத்தனைபோர் இவற்றை பற்றி அறிய முனைகிறார்கள். இணையத்தில் அடுத்தவன் எழுதுவதை அப்படியே அல்வா செய்து கொடுப்பதில் பலர் கில்லாடிகள். அண்மையில் ஒரு ஊடகவியலாளரை சந்தித்தேன். போராட்டங்கள் வரலாறு பற்றி நன்கு தெரிந்த ஒரு ஊடகவியலாளர் என்று நான் கருதியவர். அண்மையில் வந்த ஒரு திரைப்படம், அது சேயின் வரலாறு பற்றிய படம். ஆனால் சோகம் என்னவென்றால் அவருக்கே சேயே ஆரெண்டு தெரியாது. அட கடவுளே உந்த ஆள் வானொலியிலை செய்தி எல்லாம் எழுதிக் குடுக்குதாம்.
ஐரோப்பிய தமிழ் ஊடகங்கள் முதலிலை உந்த இணைய தளங்களை பாத்து செய்தி எழுதிறதை முதலைலை நிப்பாட்ட வேணும். ஊடகவியலாளர்களே வரலாறு தெரியாது வாய்க்கு வந்தததை வதக்காதையுங்கோ. வரலாறுதெரியாட்ட தயவு செய்து அதை படியுங்கோ, குறைந்த பட்சம் உலகத்திலை நடந்த விடுதலைப் போராட்டம் பற்றி அறிவை முதலிலை வளருங்கோ, ஹோ சிமிங் ஒரு சம்போ போத்தில் இல்லை, சே ஒரு சலிப்பு வார்த்தை இல்லை. வாசிக கஸ்டம் எண்டால் உந்த டிஸ்கவரி ஹிஸ்ரி சனலையாவது பாருங்கோ! எல்லாம் தெரியுமெண்டு வெளியிலை காட்டிறவை விட்டுபோட்டு தெரிஞ்சதை மட்டும் காட்டுங்கோ அதுவும் பண்பா அடக்கமா, உலகத்தை சின்னது எண்டு நினைச்சு ஊடகம் நடாத்தினால் இப்படித்தான் முடியும். கற்றது கைமண்ணளவு என்பது ஊடகங்களுக்ம் தான்!