10-22-2004, 11:02 AM
<b>ஜெயலலிதாவுக்கு வீரப்பன் அனுப்பிய கேசட்</b>
முதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிச்சை கோரி வீரப்பன் கேசட் அனுப்பியதாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
வீரப்பன் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமானதையடுத்து தனது மனைவி முத்துலட்சுமியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவிடம் மன்னிப்பும், உயிர் பிச்சையும் கோரி வீரப்பன் கேசட் அனுப்பினான். முத்துலட்சுமி மூலம் இந்த கேசட் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியிருந்ததாக முத்துலட்சுமி கூறியதாவது: மதிப்புக்குரிய அம்மா, இதுவரை தங்களைத் தவறுதலாக பேசியதற்காக மிகுந்த வருத்தம் அடைகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள்தான் வாழப் போகிறேன். அதற்காக நான் பொது மன்னிப்பு கேட்கவில்லை. நான் செய்த தவறுக்கு தண்டனை கொடுங்கள். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் தண்டனை கொடுங்கள். அவ்வளவு காலம்தான் நான் உயிருடன் இருப்பேன்.
வாழ்வின் கடைசி நாட்களையாவது நான் என் மனைவி மற்றும் குழந்தைகளோடு செலவிட்டு மடிகிறேன். அதற்காக தங்களிடம் மன்றாடி இந்த உதவியைக் கேட்கிறேன். எனக்கு ஒரு சிறையில் ஒரு தனி அறை ஒதுக்கி அங்கு மனைவி, குழந்தைகள் வந்து பார்த்து செல்ல அனுமதித்தால் போதும் என்று வீரப்பன் கூறியிருந்ததாக முத்துலட்சுமி கூறுகிறார்.
இந்த கேசட் குறித்து ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
thatstamol.com
<b>இப்படி எத்தனை உண்மைகள் உறங்குகின்றனவோ...???!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>