07-24-2003, 03:57 PM
இந்த களத்திலையே பெண்களை ஓரம் கட்ட என்றே சிலர் பறப்பது தெரியவில்லையா? ஒரு பெண்ணின் சுய சிந்தனையிலான கருத்தையே ஏற்காது ஏதோ தாம் தோம் என்கின்ற பாணியில் பறக்கிறவர்கள் எப்படி தமது குடும்ப உறுப்பினப்பெண்ணவளின் கருத்தை ஊள்வாங்குவார்கள் என்பது அதிற்சி மிகு தன்மையை என்னுள் தோற்றுவித்தள்ளது. கூண்டுப்பறவைக்கு கூட பாட கூவ தூங்க உரிமை உள்ளது பாவம் அந்த பெண்களிற்கு என்னத்தை கொடுத்து வைத்துள்ளார்களோ? ஒரு பெண்ணியக்கருத்தை ஏற்றுக்கொள்வதா நான் என்கின்ற முனைப்பில் பறப்பவர்களை நாம் ஒன்றுமே செய்து விட முடியாது தான். அவர்கள் எல்லாம் ஆறறிவிற்கு மனித நேயத்திற்கு அப்பால் பட்டவர்களே. குடத்துள் விளக்காய் இருப்பவர்கள் குன்றின் விளக்கு என நினைத்துக்கொள்ளட்டுமே .அந்த திருப்தியில் வாழ்நாளை கழித்து மடியட்டும் என விட்டுவிடுவதே களநிலமைக்கு சிறந்தது.
அகப்பை அறியுமா கறியின் சுவை. ஒரு துளியாயினும் நாக்கு அறியுமே அதன் சுவை.
நளாயினி தாமரைச்செல்வன்.
அகப்பை அறியுமா கறியின் சுவை. ஒரு துளியாயினும் நாக்கு அறியுமே அதன் சுவை.
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan

