10-21-2004, 06:49 PM
Sriramanan Wrote:Quote:இவை எல்லாம் கதைகளா...?? அப்போ ஒரு கதைக்காக தான் கந்த சஸ்டி விரதமுமா...??இவை கற்பனைக் கதைகள் என்பது உறுதி
ஆனால் விரதம் என்பது மருத்துவம் சார்ந்தது. விரதமிருப்பதால் எங்களுக்கு எந்தவித வரமும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அதன் மூலம் எமது உடல் தூய்மையடைகிறது.
நாம் யாரும் எமது உடல் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பதில்லை. விரதம் இருந்தால் எமது உடல் தூய்மையடையும் என்று யாரும் சொன்னால் நாம் ஏற்கொண்டு அதைச் செய்ய மாட்டோம். அதற்காகவே இந்தச் சமயக் கதைகளோடு தொடர்பு படுத்தி மக்கள் இவற்றைச் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவை.
கந்த சஸ்டி விரதம் இருந்தவர்கள் அவ் விரதத்தை முடித்த பின்னர் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவகையான புத்துணர்ச்சி இருப்பதை உணருவார்கள். இதை முருகன் கொடுக்கவில்லை மாறாக அந்த விரதமே கொடுக்கிறது.
நீங்கள் சொல்றது சரிதான். விரதம் மட்டுமல்ல, நாங்கள் மூடநம்பிக்கை என்று எம் மூதாதையர்களை மூடராக்கி நகைக்கும் விஷயமெல்லாத்திற்கும் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. இதில் சில இப்போதய வாழ்க்கைக்கு தேவைப்படுவதில்லை, அதனால் நாம் அவற்றை மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் அவற்றிற்கான காரணங்களை சற்று சிந்திப்போமானால் பல விஷயங்கள் புரியும்.
உந்த செவ்வாய் தோஷம் இருக்கிறாக்கள் செவ்வாய் தோஷம் இல்லாதாக்களை திருமணம் செய்தால், கணவர் அல்லது மனைவி இறந்து விடுவார் எண்டு எங்கடை பெரியாக்கள் பயப்பிடுவினம். இதுக்கான விளக்கம் யாருக்கு தெரியும். பி.கு. உண்மையில் அப்படி இறப்பது பெண்கள் அதுவும் முதலாவது மகப்பேறுக்கு பின்னர் தான். (இதைக் கேட்பதன் காரணம் விஞ்ஞானத்தில் இப்போ கண்டு பிடிச்சதை எம்மவர்கள் எப்பவோ செவ்வாய், சனி எண்டு சொல்லிப்போட்டினம்)
இரண்டாவது விஷயம்:
நவராத்திரி - 9 இரவுகள்
விஜய தசமி - 'தச' - 10 வது
ஆனால் இந்த வருடம் 8வது நாள் நவராத்திரி முடியுதாம் - 9வது நாள் விஜய தசமியாம். இலக்சுமி;க்கு தானாம் ஒருநாள் கட். உப்பிடி போனால் 4 நாளில் நவராத்திரி முடிஞசிடும் போல இருக்கு. இதுக்கு யாருக்காவது விளக்கம் தெரியுமோ??? எனக்கும் ஒண்டுமா விளங்க இல்லை......

