10-21-2004, 05:51 PM
Quote:இவை எல்லாம் கதைகளா...?? அப்போ ஒரு கதைக்காக தான் கந்த சஸ்டி விரதமுமா...??இவை கற்பனைக் கதைகள் என்பது உறுதி
ஆனால் விரதம் என்பது மருத்துவம் சார்ந்தது. விரதமிருப்பதால் எங்களுக்கு எந்தவித வரமும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அதன் மூலம் எமது உடல் தூய்மையடைகிறது.
நாம் யாரும் எமது உடல் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பதில்லை. விரதம் இருந்தால் எமது உடல் தூய்மையடையும் என்று யாரும் சொன்னால் நாம் ஏற்கொண்டு அதைச் செய்ய மாட்டோம். அதற்காகவே இந்தச் சமயக் கதைகளோடு தொடர்பு படுத்தி மக்கள் இவற்றைச் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவை.
கந்த சஸ்டி விரதம் இருந்தவர்கள் அவ் விரதத்தை முடித்த பின்னர் அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவகையான புத்துணர்ச்சி இருப்பதை உணருவார்கள். இதை முருகன் கொடுக்கவில்லை மாறாக அந்த விரதமே கொடுக்கிறது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

