Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?
#1
<span style='font-size:25pt;line-height:100%'>செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?- </span>
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'வீரப்பன்"
பெயருக்குள்ளேயே வீரத்தை
விதைத்து வைத்த விழுது நீ.
போர்ப்பித்தனாய் உன்னைப்
புதுப்பித்துப் புதுப்பித்து....
பெருலாபமடித்தோர்க்கு
பெரும்பலமாய் இருந்தாயாம்.

செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?

மர்மங்கள் நிரம்பிய உன் சாவில்
கொலைகாரர் , கொள்ளையர்கள் ,
எல்லோரும் வெற்றியென்று மார்தட்ட
நீ மட்டும் மௌனப் பிணமாக....?
உண்மை ஊமையாக....
ஊகங்கள் செய்திகளாய்....ஆய்வுகளாய்....

சந்தனக்கடத்தலும் , தந்தக்கடத்தலும்
தனியே நீ செய்தாயா....?
இல்லையில்லை....கொள்ளையிடும் வல்லவரின்
கைப்பைகள் நிரம்புதற்கு
கைப்பொம்மையானாய் நீ.
இதுவே உண்மையாகும்.

உன்பக்கம் எல்லாம்
நியாயமென்று சொல்லமாட்டேன்.
தம்பக்கம் இருந்த கறை கழுவுதற்கு
உன்பெயரைத் தமதாக்கிக் கொண்டவரே
முதற்குற்றவாopகள்....முகமூடிக்கள்வர்கள்....

வாழ்வில் வலிகண்டோர்
வாழ்வைப் பலிகொள்ளும்
வஞ்சகர் வலையுந்தன்
வாழ்வைப் பலிகொண்டதென்பேன் நான்.

வனாந்திரத்தெருவெங்கும்
வழக்கமாய் நடக்கும் உன் கால்களுக்கு
வாகனத்தேவையென்ன வந்ததுவோ....?
தேவையைத் தமக்குரிய தேர்வாய் தெரிந்தோரின்
வஞ்சக வலையில் நீ.
வலமெது இடமெது வஞ்சகர்க்கே வெளிச்சம்.

ஓர் வீரப்பன் மறைந்து போனாய்
இன்னும் எத்தனை வீரப்பன்களை
உருவாக்கிப் போனாயோ.....?

21.10.04.
Reply


Messages In This Thread
செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...? - by shanthy - 10-21-2004, 02:47 PM
[No subject] - by shanmuhi - 10-21-2004, 09:07 PM
[No subject] - by shanmuhi - 10-21-2004, 09:36 PM
[No subject] - by tamilini - 10-21-2004, 10:11 PM
[No subject] - by kavithan - 10-22-2004, 12:02 AM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 01:16 AM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 07:22 AM
[No subject] - by shanmuhi - 10-23-2004, 07:12 PM
[No subject] - by tamilini - 10-23-2004, 07:20 PM
[No subject] - by Sriramanan - 10-23-2004, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)