07-24-2003, 03:33 PM
யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்
இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார்
இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார்
Quote: சில வாரங்களுக்கு முன் எங்கட பகுதியிலை நடந்த தமிழாலயங்களின் பதின்மூன்றாவது ஆண்டு விழாவிற்குப் போயிருந்தன். அதிலை கண்ட காட்சியள் எனக்கொரு ஆதங்கத்தை உண்டாக்கிவிட்டுது. அதை ஒருக்கால் ஆரோடையாவது பகிர்ந்துகொள்ளவேணும்போல கிடந்தது அதுதான் விசயத்தை எழுதுறன் படிச்சுப்போட்டு நீங்களும் ஒருக்கால் சிந்திச்சுப் பாருங்கோவன்.
அங்கை விழாவிலை பல ஆசிரியைகள் பம்பரமாச் சுத்திச் சுழன்று மண்டப ஒழுங்கு, நிகழ்ச்சுp ஒருங்கிணைப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு எண்டு பல வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துகொண்டு இருந்தினம். இவ்வளவு ஆர்வத்தோடையும் தங்கட வீட்டு நிகழ்வு எண்டதுபோன்ற உணர்வோடையும் அவையள் வேலை செய்யிறதைப் பார்த்து அட எங்கட பொம்பிளையள் பொதுச்சேவையளிலை இவ்வளவு ஈடுபாடாய் இருக்கினமெண்டு வலு சந்தோசமா இருந்தது. கொஞ்ச நேரத்திலை ஆசிரியர் கௌரவிப்பு நடந்தது. அதிலையும் பத்து ஆண்டுகளுக்கு மேல சேவை செய்த ஆசிரியைகள் எண்டு தாய்க்குலத்தினர் பலர் கௌரவிக்கப்பட்டினம். எனக்கெண்டால் புளுகம் தாங்கேல்லை, பக்கத்திலை இருந்த என்ரை செல்லம்மாட்டைச் சொன்னன். அடியே செல்லம் ஊரிலைதான் எங்கட பெண்டுகள் ஆம்பிளையளுக்குச் சற்றும் குறைவில்லாமல் எல்லாத்துறையளிலையும் நிக்கேல்லை இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம். நான் சொல்லி முடிக்க முந்தியே அவளென்டால் அவசரப்பட்டுக் குதிக்காதையுங்கோ மிச்ச நிகழ்ச்சியளையும் வடிவாப் பாத்திட்டு பிறகு சொல்லுங்கோ. எண்டு ஒரே போடாப்போட்டாள். எனக்கெண்டால் ஒண்டுமாப் புரியேல்லை, இவளுக்கு நான் என்ன சொன்னாலும் பொறுக்காதே அதுதான் புறுபுறுக்கிறாள். எண்டு மனசுக்கை கறுவிக்கொண்டாலும் செல்லம்மா சொன்னால் அதிலை எதாவது விசயம் இல்லாமலும்போகாது எண்ட பயத்திலை கம்மெண்டு உக்காந்து மிச்ச நிகழ்ச்சியளைப் பாக்கத் தொடங்கினன். கொஞ்ச நேரத்திலை நிர்வாகியள் கௌரவிப்பு நடந்தது. இப்ப என்ன சொல்லுறியள் செல்லத்தின்ரை குரல் நக்கலாக் கேட்டுது. பாருங்கோ எத்தனை நிர்வாகியள் வரிசையா வந்து கேடயத்தோட போகினம் இதிலை உங்கட பெண்டுகள் எங்கைபோட்டினம், ஒருத்தரையும் காணேல்லை.
அப்பத்தான் என்ரை மர மண்டைக்கு உதிச்சுது. இதிலை மட்டுமில்லை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிற எங்கட அரசியல் அமைப்பு, புனர்வாழ்வு அமைப்பு, பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு எண்டு எதிலையும் நிர்வாகத் தரத்திலை பெண்டுகள் ஒருத்தரும் இருக்கிறதாத் தெரியேல்லை எண்டது.
ஆனால் பாருங்கோ எனக்கு இதிலை ஒரு விசயம் புரியேல்லை. இஞ்சை இருக்கிற எங்கட பொம்பிளையள் றேடியோவிலை புதுக்கவிதை படிக்கிறது, பெண்ணியம் பேசுறது எழுதுறது, உணர்ச்சி புூர்வமான கதையள் எழுதுறதோட தங்கட பணி முடிஞ்சுpட்டுது எண்டு இருக்கினமோ? அல்லது எங்களுக்கு வீட்டிலை மட்டுமில்லை பொது விசயத்திலையும் மாடா உழைக்கிறதுக்குத்தான் பெண்டுகள் தேவை அதுக்குமேல சிந்திச்சுச் செயல்படுற மாதிரி ஒரு அமைப்பை நிர்வகிக்கிற அளவுக்கு அவையளை விடமாட்டம் எண்டதிலை புலம்பெயர் ஆம்பிளையள் கவனமா இருக்கினமோ?............
[b] ?

