10-21-2004, 07:48 AM
Quote:முருகனைப் பாலனாகக் காட்டியதும் அவன் பெரிய அசுரனை அழிப்பதாகக் காட்டுவதும் உண்மை நிகழ்வில்லாமல் இருந்தாலும் கூட சொல்லும் தத்துவமே முக்கியம்... தர்மம் சிறிதாயினும் அது அதர்மத்தை அழிக்கும்... அழிவின் போதும் தர்மம் தன் பண்பை இழக்காது... அது மட்டுமன்றி ஆன்மா என்பது எல்லோருக்கும் சமன் உடல் தான் மாறுபடுகிறது அது கொண்ட மனம் தான் ஆணவத்தை வரவழைத்து அநியாயத்தை வளர்க்கிறது...தர்மம் அநியாயத்தைத்தான் அழிக்கும் அதற்குள் இருக்கும் தர்மத்தைக் கூட அழிக்காது என்பதுதான் விளக்கம்...! அதனால் தான் சூரனின் ஆன்மா சேவலும் மயிலுமாக உடல் பெற்றது...!
குருவியரே எனது கேள்வி முருகன் பெரியவனா அல்லது சூரன் பெரியவனா என்பதில்லை.
நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான காரணம் இக் கதைகளை எழுதியோர் தங்கள் மனம் போன போக்கில் எழுதியுள்ளனர் என்பதையும் கதை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவுமே.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

