10-21-2004, 01:40 AM
Sriramanan Wrote:குருவியரே நீங்கள் கூறியது சரிதான் அதேநேரத்தில் முருகனுக்கு மயில் வாகனமானது சூரனுடன் இடம்பெற்ற போரில்தான். சூரனின் உடல் அங்கம் ஒன்றை முருகன் வெட்டியெறிந்தபோது அதுவே மயிலாக மறியதாக சமயப் புத்தகத்தில் படித்த ஞாபகம். மாம்பழக் கதையில் வரும் சிறுவன் முருகன் அந்த மயில் வாகனத்திலேயே உலகை வலம் வருகிறான். ஆனால் இச் சிறுவன் முருகன் சூரனுடன் போர் புரிந்த இளைஞன் முருகனைவிட வயதில் மூத்தவன்.
சிறுவனாக உள்ளவனுக்கு இளைஞனாக உள்ளவனை விட வயது அதிகம்??!! இது தான் இந்து மதம்
முருகனைப் பாலனாகக் காட்டியதும் அவன் பெரிய அசுரனை அழிப்பதாகக் காட்டுவதும் உண்மை நிகழ்வில்லாமல் இருந்தாலும் கூட சொல்லும் தத்துவமே முக்கியம்... தர்மம் சிறிதாயினும் அது அதர்மத்தை அழிக்கும்... அழிவின் போதும் தர்மம் தன் பண்பை இழக்காது... அது மட்டுமன்றி ஆன்மா என்பது எல்லோருக்கும் சமன் உடல் தான் மாறுபடுகிறது அது கொண்ட மனம் தான் ஆணவத்தை வரவழைத்து அநியாயத்தை வளர்க்கிறது...தர்மம் அநியாயத்தைத்தான் அழிக்கும் அதற்குள் இருக்கும் தர்மத்தைக் கூட அழிக்காது என்பதுதான் விளக்கம்...! அதனால் தான் சூரனின் ஆன்மா சேவலும் மயிலுமாக உடல் பெற்றது...!
எனவே சிறுவன் ஆகினும் தர்மத்துக்காய் வாழ் எந்தப் பெரிய அதர்மத்தையும் நீ எதிர் கொள்ளும் திறன் பெறுவாய் என்பதுதான் வாழ்வியல் விளக்கமாக இருக்க முடியும்....! அதை விட்டுவிட்டு முருகன் சின்னனா பெரிசா என்பது விளங்கிக் கொள்ள முடியா வேடிக்கை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

