10-21-2004, 01:27 AM
Sriramanan Wrote:Quote:சமயங்கள் காட்டும் ஆன்மீக வழியை... விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத பலவற்றை... ஆன்மீகம் மெய்யியல் கொண்டு அற்புதமாக விளக்கி உள்ளது... அதற்குச் சான்று தியானமும் யோகாசனமும்....இவை விஞ்ஞானம் தோன்ற முன் வந்தவை...ஆனால் இன்று அதன் தன்மைகளை உடற்தொழிலியல் கொண்டு விளக்க வெளிக்கிட்டால் விஞ்ஞானமே வியந்துதான் நிற்கும்... விஞ்ஞானம் தெரியாத காலத்தில் கிரிகைகளுக்காக கட்டிய பிரமிட்டுகள் இன்று நவீன விஞ்ஞானத்தால் வியந்து பார்க்கப்படும் அம்சம் தான்... இப்படிப்பல....!
குருவியரே...! தியானமும் யோகசனமும் ஒருவகை மருத்துவமேயன்றி இவை சமயம் சார்ந்தவையல்ல. இவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இவைகளைச் சமயம் சார்ந்ததாக காட்டப்பட்டுள்ளது.
கீழத்தேய (இந்திய உபகண்ட மருத்துவம்) மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும்...அது இயற்கையில் உள்ள மூலிகைகள் கொண்டு தியானங்கள் அநுட்டானங்கள் என்று மத நெறி சார்ந்து எழுந்தவை.... ஏடுகள் மூலம் சந்ததிக்கு சந்ததி கடத்தப்பட்டவை... அந்த மருத்துவமுறைகளுக்கும் மத நெறிகளுக்கும் இடையே பகுக்க முடியாத ஒற்றுமை உண்டு தற்போதும் இருந்து வருகிறது...!
பல மேலைத்தேய மருத்துவ முறைகள் உடல் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணி ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுகின்றன...ஆனால் சித்த மருத்துவம் அப்படி அன்று....அது இயற்கையோடு ஒன்றிய ஒரு மருத்துவ முறை..நாம் உணவு உண்பது போன்று இயற்கையாக உள்ள மூலிகைகள் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை...அதற்குள் நெறிகளும் தியான முறைகளும் புகுத்தப்பட்டு சிறப்பான பலன் பெறப்பட வழி செய்யப்பட்டுள்ளது...! அது இயற்கை மருத்துவ முறையாகையால் நோய் சுகமடைய நீண்ட காலம் எடுக்கும் மேற்குலக மருத்துவ முறை நோயை குறுகிய காலத்தில் மாற்றினாலும் உடல் இரசாயனச் சமநிலையை பெரிதும் பாதிக்கச் செய்கிறது....!
மத நெறிகளும் மருத்துவ நெறிகள் தான்...! நமஸ்காரம் கூட ஒரு உடற்பயிற்சி தான்..... ஜிம் என்று போய் முள்ளந்தண்டு என்பு விலகல்... முள்ளந்தண்டு என்பு இடைத்தட்டு விலகல்... நரம்புக் கோளாறுகள் என்று வருபவர்கள் அதிகம்...ஆனால் தினம்தோறும் வீட்டில் நமஸ்காரம் செய்தவர்கள் இப்படியாக வருவது கிடையாது.....!
தயவுசெய்து ஒன்றைக் குறை கூற முதல் இயன்றவரை அதைப் பற்றி ஆழமாக அறிய முயலுங்கள்... அதன் பின் குறை இருந்தால் சொல்லுங்கள்... திருத்த வசதி அளிக்கும்... வெறும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்லாதீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

