Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#20
<b>கொண்டாட்டத்தில் வீரப்பனின் கிராமம்</b>

இத்தனை ஆண்டுகளாய் வீரப்பனுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னாவாகி வந்த வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

வீரப்பனின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள கொள்ளேகாலை அடுத்த கோபிநத்தமாகும். இங்கு தமிழர்களும் கன்னடர்களும் சமமான அளவில் வசிக்கின்றனர்.

இக் கிராமத்தில் வீரப்பனுக்குச் சொந்தமாக 19 ஏக்கர் நிலம் உள்ளது. வீரப்பன் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அதிரடிப் படையினர் கோபிநத்தத்துக்கு வந்து விசாரணை என்ற பெயரில் கிராம மக்களை அடிக்கடி பயங்கரமாக துன்புறுத்தி வந்தனர்.

வீரப்பனுக்கு உதவியதாக பல குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். அதே போல போலீசிடம் தன் ஆட்களைக் காட்டிக் கொடுத்ததாக சந்தேகப்பட்ட வீரப்பனும் தனது ஆட்களை வைத்து இந்த ஊரைச் சேர்ந்த பலரை கொன்றிருக்கிறான்.

இப்படி இரு பக்கமும் அடி வாங்கி வதைபட்ட இந்தக் கிராமத்தினர் வீரப்பன் கொல்லப்பட்ட செய்தி வந்தது முதல் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து வருகின்றனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஊரைச் சேர்ந்த, வீரப்பனின் சித்தி மாரக்காள் நிருபர்களிடம் பேசுகையில்,

வீரப்பனால் இந்தக் கிராமத்திற்கு எந்த பயனுமில்லை. அதிரடிப்படையினரால் தொல்லை ஏற்பட்டதுதான் மிச்சம். எனவே வீரப்பனை சுட்டுக்கொன்றதில் எங்களுக்கு வருத்தம் இல்லை. இனிமேல் நாங்கள் எந்தத் தொல்லையுமின்றி, நிம்மதியாக இருப்போம் என்றார்.

வீரப்பனின் முன்னாள் கூட்டாளி கோவிந்தராஜ் பேசுகையில்,

வீரப்பனைக் காட்டிலும் அதிரடிப் படையினரால்தான் நாங்கள் பல தொல்லைகளை அனுபவித்தோம். எங்களது குழந்தைகளின் படிப்பு பாழானது. 40 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்தும், எங்களால் பட்டா பெற முடியவில்லை.

வீரப்பன் கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது. இருப்பினும் அதை வெளிப்படையாக தெரிவித்தால் அதிரடிப் படையினரால் மீண்டும் தொல்லை ஏற்படும் என்ற பயம் இருக்கிறது. எனவே, வீரப்பன் இறந்தது மகிழ்ச்சி என்று கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இனியாவது கிராம மக்கள் பிரச்சினையின்றி, நிம்மதியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ஓப்பனாக.

வீரப்பன் இங்கு பிறந்திருந்தாலும் இக் கிராமத்துக்குள் அவன் நுழைந்து பல ஆண்டுகளாகின்றன. கிராமத்தில் தொடர்ந்து ரகசிய போலீஸ் கண்காணிப்பு இருந்ததால் உள்ளே வருவதைத் தவிர்த்தே வந்தான். பிரச்சனைகளை ஆட்களை அனுப்பி பேசுவதே அவன் வழக்கம். போலீசுக்கு உளவு சொல்பவர்களையும் ஆள் வைத்தே கதையை முடித்து வந்தான் வீரப்பன்.

வீரப்பனை 15 வயதில் பார்த்திருக்கிறோம் என்று இக்கிராமத்தைச் சேர்ந்த ஐயன்துரை, படையாச்சி ஆகியோர் கூறுகின்றனர். அதற்குப் பின் உள்ளே வந்ததே இல்லையாம்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)