Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#19
<b>வீரப்பனின் பணம், ஆயுதங்கள் கதி என்ன?</b>

வீரப்பனும் அவனது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுவிட்டாலும் இன்னும் அவனது ஆட்கள் சிலரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தினரும், வீரப்பனின் ஆயுதங்களும், கோடிக்கணக்கான பணமும் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆட்களையும் ஆயுதங்கள், பணத்தை தேடும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபடவுள்ளனர். இதனால் அதிரடிப்படையை உடனே கலைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

யானை தந்தம், சந்தன மரங்கள் கடத்தியதில் ஏராளமான பணம் ஈட்டிய வீரப்பன் பின்னர் ஆட்களைக் கடத்தி லட்சங்களைப் பறித்து வந்தான். பின்னர் கோடிகளுக்கு முன்னேறிவிட்டான். குறிப்பாக ராஜ்குமாரை விடுவிக்க அவனுக்கு ரூ. 4 கோடி தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவன் வசம் பல கோடி ரூபாய் இருந்தது உறுதி.

மேலும் ஏராளமான துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், தோட்டாக்களும் வைத்திருந்தான் வீரப்பன்.

இந்தப் பெரும் பணத்தையும் ஆயுதங்களையும் காட்டுப் பகுதி கிராமங்களில் தனக்கு மிக நெருங்கியவர்களிடம் பதுக்கி வைத்திருந்தான். மேலும் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே இவற்றை புதைத்தும் வைத்திருந்தான். இப்போது இவற்றை ட்ரேஸ் செய்து கையப்படுத்துவது எப்படி என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறது அதிரடிப்படை.

மேலும் காட்டுப் பகுதியில் தனி தமிழ்நாட்டுக் கொடியையும் ஏற்றினார்கள் வீரப்பனுடன் இருந்த தமிழ் தேசிய விடுதலைப் படையினர். இவர்கள் தொடர்ந்து காட்டில் தான் பதுங்கியிருக்கிறார்கள். இவர்களையும் பிடிக்க அதிரடிப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

<b>வீரப்பன் முன்பே பிடிபட்டானா..?</b>

இதற்கிடையே வீரப்பனை பல மாதங்களுக்கு முன்பே அதிரடிப்படை பிடித்துவிட்டதாகவும், இப்போது ஜெயலட்சுமி விவகாரத்தில் காவல்துறையின் பெயருக்கு பெரும் களங்கம் நேர்ந்துள்ளதால், விஷயத்தை திசை திப்ப வீரப்பனை எண்கௌன்டர் போட்டு கதையை முடித்துவிட்டனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

<b>சேத்து மணி கையில் பா.ம.க சின்னம் :</b>

வீரப்பனுடன் சுட்டுக் கொல்லப்பட்ட சேத்து மணியின் கையில் பி.எம்.கே. என்ற பச்சை குத்தப்பட்டு அருகில் மாம்பழச் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால் இவன் பாமகவைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு பா.ம.கவினருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், சேத்துமணியை கொன்றுவிட்டு, கையில் இந்த பச்சையைக் குத்தியதே போலீஸாகத்தான் இருக்க முடியும் என்கின்றனர் பா.ம.கவினர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)