Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#18
வீரப்பன் உடல் புதைக்கப்பட்டது

மேட்டூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் இன்று மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அதிகாலையில் புதைக்கப்பட்டது. வீரப்பனின் உடலை அவனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உடல்கள் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் வீரப்பனின் உடல் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் கொடுக்கப்பட்டது.

வீரப்பனின் உடலை முத்துலட்சுமி கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீரப்பனின் உடல் மூலக்காடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்று இரவு 8 மணியளவில் வீரப்பனின் உடல் மூலக்காடு வந்து சேர்ந்தது. அவனது உடலைப் பார்த்ததும் குழுமியிருந்த வீரப்பனின் உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வீரப்பன் உடலைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

ஆனால் கிராம எல்லையிலேயே போலீஸார் வீரப்பன் பிணம் வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இப்படியே மயானத்திற்குக் கொண்டு போய் தகனம் செய்து விடுங்கள் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி போலீஸாருடன் கடுமையாக வாதாடினார். இந் நிலையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் சுகுமாறன் ஆகியோர் வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவருடன் அங்கு வந்தார்.

அவர்கள் வீரப்பன் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பேசினர். மேலும், வீரப்பன் உடலை எரிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் வழக்கு, விசாரணை வந்தால் உடலை மீண்டும் தோண்டியெடுக்க வசதியாக புதைக்கத்தான் போகிறோம்.

வீரப்பன் குடும்ப குல வழக்கப்படி பகலில்தான் பிணத்தை அடக்கம் செய்வார்கள். எனவே போலீஸார் அதைத் தடுக்கக் கூடாது. வீரப்பனை சுட்டதுடன் அவர்களது வேலை முடிந்து விட்டது. புதைப்பதா, எரிப்பதா, எப்போது இறுதிச் சடங்குகளை செய்வது என்பது வீரப்பனின் குடும்ப விஷயம் என்று கடுமையாக வாதாடினர்.

இருப்பினும் போலீஸார் மிகவும் உறுதியாக இருந்தனர். பிணத்தை கிராமத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இந் நிலையில் அங்கு வந்த சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுடன் வீரப்பன் குடும்பத்தினரும், கொளத்தூர் மணியும் பேசினர். இதையடுத்து பிணத்தை அங்கேயே வைத்திருந்து விட்டு காலையில் அடக்கம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதனால் ஆம்புலன்ஸ் கிராம எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 6.30 மணியளவில் வீரப்பன் உடல் மூலக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. கோவை சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள வீரப்பனின் சகோதரர் மாதையன் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, மகள்கள் வித்யாராணி, பிரபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேபோல, சேத்துக்குளி கோவிந்தனின் உடல் மூலக்காடு அருகே உள்ள கோரப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று இரவு 8 மணிக்கு எரியூட்டப்பட்டது. சேதுமணியின் உடல் அரியலூர் மாவட்டம் காட்டம்பாடி கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. மற்றொரு கூட்டாளியான சந்திரே கௌடாவின் உடல் சத்தியமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.

thatstamil.com
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)