10-19-2004, 03:54 PM
மனைவியிடம் ஒப்படைக்கப்படும் வீரப்பனின் உடல்
தர்மபுரி:
சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவி முத்துலட்சுமி சில உறவினர்களுடன் தர்மபுரி வந்தார்.
முத்துலட்சுமி சென்னையில் வசித்து வருகிறார். நேற்றிரவு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சோகத்தில் மூழ்கிய முத்துலட்சுமி தர்மபுரி விரைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த அவரைச் சந்திக்க நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவரைப் படமெடுக்க முயன்ற நிருபர்களை முத்துலட்சுமி கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து அவரை தனி அறைக்குக் கொண்டு சென்றனர் போலீசார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் வீரப்பனின் உடல் முத்துலட்சுமியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. வீரப்பனுக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல சேத்துக்குளியானின் உறவினர்களும் அவனது உடலைப் பெற்றுச் செல்ல மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அண்ணன் மனு:
இதற்கிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பனின் அண்ணன் மாதையன், வீரப்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வீரப்பனுக்கு உதவியதாக மாதையன் கைது செய்யப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந் நிலையில் தம்பியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் செல்ல அனுமதி கோரியுள்ளார்.
கிராமத்தினர் கோஷம்:
இதற்கிடையே வீரப்பனின் உடல் வைக்கப்பட்டுள்ள தர்மபுரி மருத்துவமனைக்கு அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் வந்தனர். அவர்கள் வீரப்பனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி அழுது புலம்பினர்.
ஆனால், அவர்களை மருத்துவமனைக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதே போல வீரப்பன் உடலைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் தர்மபுரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வீரப்பன் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நிருபர்கள், போட்டோகிராபர்கள், அதிரடிப்படையினர், போலீசார் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வீரப்பன் உடல் வெளியே எடுத்து வரப்படும்போது எப்படியாவது பார்த்து விடுவது என்ற முடிவல் இருக்கும் பொது மக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனை முன் மிகப் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மருத்துவமனை முன் கூட்டம் காரணமாக போக்குவரத்து வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டது.
தமிழ்த் தீவிரவாதியின் குடும்பம் வருகை:
இதற்கிடையே வீரப்பனுடன் கொல்லப்பட்ட சேதுமணி தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்ட சேதுமணி இப்போது வீரப்பனுடன் சேர்ந்து மரணம் ஏய்தியுள்ளார்.
அவரது உடலை அடையாளம் காட்ட அவரது குடும்பத்தினரை ஜெயங்கொண்டத்தில் இருந்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். உடலையும் அவர்களிடமே ஒப்படைக்கவுள்ளனர்.