Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#15
<b>செத்தும் சாதித்த வீரப்பன்..!</b>

<img src='http://www.thatstamil.com/images24/veerappan250.jpg' border='0' alt='user posted image'>

என்னை உயிருடன் பிடிக்கவே முடியாது, எனது பிணத்தைத்தான் காவல்துறையால் கைப்பற்ற முடியும் என்று தான் விடுத்த சவாலை நிறைவேற்றிவிட்டான் சந்தனக் கடத்தல் வீரப்பன்.

தேவாரத்தின் தலையை கொய்யாமல் விட மாட்டேன் என்று கருவியிருந்தவன் வீரப்பன். அதேபோல கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக இருந்த சங்கர் பித்ரியையும் கொல்லாமல் சாக மாட்டேன் என்று கர்ஜித்தவன் வீரப்பன்.

மேலும் என்னை யாராலும் உயிருடன் பிடிக்க முடியாது. காவல்துறை மட்டுமல்ல ராணுவமே வந்தாலும் என்னை உயிருடன் பிடிக்க முடியாது. முடிந்தால், நான் செத்தால் எனது உடலை வந்து காவல்துறையினர் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று சவால் விட்டிருந்தான் வீரப்பன்.

இப்போது வீரப்பனின் அந்த சவால் வென்றிருக்கிறது.

வீரப்பனைப் பிடிக்க பல கோடிகளை செலவழித்தும், முடியாமல் திணறிய தமிழக அதிரடிப்படை இப்போது வீரப்பனை பிணமாகத்தான் பிடித்திருக்கிறது.

வீரப்பன் கொல்லப்பட்டதற்காக அதிரடிப்படையினர் மகிழ்ச்சியடைந்தாலும், அவனை உயிருடன் பிடிக்க முடியாதது இந்தப் படைக்குக் கிடைத்த சறுக்கல்தான்.

உயிருடன் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால், அவனுக்கு பின்னால் இருந்து இயங்கிய, அவனை வைத்து பலன் கண்ட பல பண முதலைகள், கரை வேட்டிகளின் வண்டவாளம் வெளியில் வந்திருக்கும்.

<b>மிருகம் செத்தது: பிரமிளா நாகப்பா</b>

இதற்கிடையே வீரப்பனால் கொல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி கூறுகையில்,

வீரப்பன் என்ற மிருகம் செத்திருக்கிறது. கடவுள் தண்டனை வழங்கிவிட்டார். இன்னும் பல உயிர்கள் பலியாவதற்கு முன்பாக அவனைக் கொன்றது மிகவும் சந்தோஷம். அவனை உயிரோடு பிடித்திருந்தால் பல ரகசியங்கள் வெளியில் வந்திருக்கும். இனி அந்த ரகசியங்கள் அப்படியே புதைந்து போகும்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)