Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#14
<b>அரசியல் தொடர்புகளை விசாரிப்போம்: கர்நாடகம்</b>

வீரப்பன் கொல்லப்பட்டதற்கு தமிழக அதிரடிப்படை மட்டும் காரணமல்ல. கர்நாடக அதிரடிப் படையும்தான் காரணம் என்று கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி போர்கர் கூறியுள்ளார்.

வீரப்பன் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன் இரவோடு இரவாகக் கிளம்பி அதிகாலையில் அவர் தர்மபுரி வந்துள்ளார்.

<b>வீரப்பனின் அரசியல் தொடர்புகள்:</b>

இதற்கிடையே வீரப்பனின் அரசியல் தொடர்புகள், அவனது பண பேரங்கள் குறித்து விசாரணக்கு உத்தரவிடப் போவதாக கர்நாட முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் தமிழக, கர்நாடக எல்லையில் நிலவி வந்த பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக கர்நாடக, தமிழக போலீசாருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரப்பனின் சாவோடு சில உண்மைகளும் புதைந்துவிடாமல் தடுக்கும் வகையில் அவனது அரசியல், பணத் தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட இருக்கிறோம் என்றார்.)

<b>ஜெவுடன் தரம்சிங் பேச்சு:</b>

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை தரம்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இதற்கிடையே வீரப்பன் கும்பலில் இடம்பெற்று அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவனது கூட்டாளி சந்திரே கௌடாவின் உடலை அடையாளம் காட்டவும் உடலைப் பெறவும் அவனது தந்தையை அதிரடிப் படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரான சந்திரே கௌடாவின் சொந்த ஊர் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் ஆகும். சந்திரே கௌடா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் கௌடாவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

கௌடாவின் வீட்டுக்கு உறவினர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந் நிலையில் கௌடாவின் தந்தையை அதிரடிப் படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கௌடாவை அடையாளம் காட்டுமாறும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கௌடாவின் தந்தை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)