Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#11
மேலதிக செய்தி
வீரப்பனை கொன்ற 'ஆபரேஷன் கூட்டுப்புழு': விஜயக்குமாரின் 'திகில்' பேட்டி

தர்மபுரி:

சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகள் 3 பேரும் தமிழக அதிரடிப் படையினரால் நேற்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நால்வரும் தர்மபுரி மாவட்டம் ஓகேனகல் அருகே பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்து பாடி வனப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் வைத்து கொல்லப்பட்டனர்.

உளவாளிகள், போலீஸ் நெட்வோர்க், ஊருருவல், போலி ஆம்புலன்ஸ் என ஒரு மெகா திகில் சீரியலுக்கு இணையான பல ஆச்சரியங்களுடன் நடத்தப்பட்டுள்ளது இந்த எண்கௌன்டர்.

வீரப்பனின் கதையை முடிக்க அதிரடிப்படை போட்ட இந்த பகீர் திட்டத்தின் பெயர் 'Oணீஞுணூச்tடிணிண ஞிணிஞிணிணிண' ('ஆபரேசன் கூட்டுப்புழு')

இந்தத் திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து இன்று தர்மபுரி அதிரடிப்படை சிறப்பு முகாமில் அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் விரிவான பேட்டியளித்தார். அப்போது கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக அதிரடிப்படை காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆபரேசன் கூட்டுப்புழு குறித்து விஜயக்குமார் கூறியதாவது:

வீரப்பன் வழக்கமாக உலவும் வனப் பகுதிகளை விட்டு விட்டு அவனுக்கு அதிக ரிஸ்க் உள்ள, அவன் அதிகம் தலைகாட்டாக கிழக்குப் பகுதி காடுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் நாங்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கினோம்.

இந்தப் பகுதிகளுக்கு அவன் அவ்வளவாக வருவதில்லை என்பதைப் பயன்படுத்தி அங்குள்ள லோக்கல் ஆசாமிகளுடன் கலந்தோம். அவர்களைக் கொண்ட ஒரு பெரிய உளவு நெட்வோர்க்கை உருவாக்கினோம். வீரப்பன் நடமாடும் கிராமங்களுக்குள்ளும் அதிக ரிஸ்க் எடுத்து அதிரடிப்படையினர் மாறு வேடங்களில் ஊடுருவினர்.

தோட்ட வேலை பார்ப்பவர்களாக, கூலிகளாக அவர்கள் கிராமங்களுக்குள் கலந்தனர். எங்களது உளவு நெட்வோர்க்குடன் இணைந்து இவர்கள் தகவல்களை சேகரித்தனர்.

குறிப்பாக முருகேசன் என்ற அதிரடிப்படை வீரர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, வீரப்பனுக்கு நேரடியாக உதவும் ஆட்களுடன் பழகி, அவர்களுக்கு நெருக்கமானார். அவர்கள் மூலமாக நிறைய தகவல்களை எங்களுக்குத் திரட்டித் தந்தார்.

மேலும் தமிழகம், கொள்ளேகால், பெங்களூரில் உள்ள சிறைகளில் உள்ள சிலர் மூலமாகவும் வீரப்பனுக்கு நெருக்கமானவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. (தமிழக சிறைகளில் தமிழ் தேசிய இயக்கத் தீவிரவாதிகளும், கர்நாடகத்தில் வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களும், கொள்ளேகாலில் வீரப்பனின் ஆதரவாளர்கள் பலரும் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). இந்த விஷயத்தில் நான் அதிக விவரம் தர முடியாது.

வீரப்பனுக்கு கண்ணில் பிரச்சனை இருப்பது எங்கள் உளவு நெட்வோர்க்குக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவனுக்கு சிகிச்சை தரலாம் என்று சொல்லி அவனை காட்டை விட்டு வெளியே கொண்டு வர முயன்றோம்.

அவனது ஆதரவு கும்பலை வைத்தே அவனை அஞ்செட்டி, பண்ணாரி போன்ற இடங்களுக்கு 'சிகிச்சைக்காக' கொண்டு வர முயன்றோம். ஆனால், அந்தத் திட்டங்கள் தொடர்ந்து தோற்றன.

ஆனாலும் எங்கள் முயற்சி தொடர்ந்தது. 1 வாரத்திற்கு முன் மேற்குப் பகுதி காட்டுக்கு வீரப்பனை வரவைக்க முயற்சித்தோம். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. ஆனாலும் நாங்கள் துவளவில்லை.

தொடர்ந்து முயற்சி செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு அருகே உள்ள பாடி வனக் கிராமத்திற்கு வீரப்பனை வரவைக்க முயற்சி செய்தோம். இந்த முறை எங்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்து.

இதையடுத்து எங்களது அதிரடிப் படையைச் சேர்ந்த ஒரு வீரரை ஏற்பாடு செய்து காவல்துறை ஏற்பாடு செய்த போலி ஆம்புலன்ஸ் வண்டியில் வீரப்பனையும், கும்பலையும் காட்டுக்கு வெளியே வரவழைத்தோம்.

பாடி பகுதியில் அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர்கள், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் இரவு 10.20மணிக்கெல்லாம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.

வீரப்பன் வந்த ஆம்புலன்ஸ் வேன் இரவு 10.40 மணிக்கு அப்பகுதிக்கு வந்தது. இதையடுத்த போலீஸார் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து வீரப்பன் கும்பலை சரணடைய உத்தரவிட்டனர். ஆனால் அவன் மறுத்து விட்டு துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.

மீண்டும் ஒரு முறை சரண் அடையுமாறு வீரப்பன் கும்பலுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவன் மறுத்து விட்டான். இதையடுத்து 10.50 மணிக்கு தமிழக அதிரடிப்படை வீரர்கள், ரெமிங்டன் பம்ப் கன் எனப்படும் சரமாரியாக புல்லட்டுகளை வெளியேற்றும் வகையிலான துப்பாக்கிகளால் சுட்டனர்.

11.10 வரை துப்பாக்கி சூடு நீடித்தது. இதில் வீரப்பனும், அவனது கும்பலும் உயிரிழந்தனர்.

வேனை ஓட்டி வந்தவர் எங்களது அதிரடிப் படை வீரர் என்பதால் அவர் வேனை எங்கள் படையினர் அருகே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, உடனே வெளியில் குதித்துவிட்டார்.

அவர், வீரப்பன் கும்பலுடன் அரை மணி நேரத்திற்கு முன்பு தான் சேர்ந்தார். அவருக்கும், வீரப்பன் கும்பலுக்கும் எந்தவித முன் தொடர்பும் கிடையாது. அவரை வீரப்பன் கும்பலிடம் அறிமுகப்படுத்தி சேர்த்துவிட்டது எங்களது உளவு நெட்வோர்க் தான். இதற்கு மேல் அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்க முடியாது.

முழுக்க முழுக்க தமிழக அதிரடிப் படையின் மிகச் சிறந்த, துல்லியமான, புத்திசாலித்தனமான உளவு நடவடிக்கைகள் காரணமாக வீரப்பனை இந்த முறை எங்களால் எளிதாக வளைக்க முடிந்தது. அவனை சுட்டுக் கொல்வது எங்களது நோக்கமல்ல, சரணடைய வைக்கத்தான் முயன்றோம். ஆனால் முடியாததால் சுட்டுக் கொன்றோம்.

மேலும், வீரப்பன் கும்பலில் 4 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்குள் சில பிரச்சினைகளும் இருந்ததும் எங்களுக்குத் தெரியவந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சேதுமணி என்பவர் வீரப்பனை விட்டுப் பிரியும் மனநலையில் இருந்தார்.

சந்திரே கௌடாவும் அவரது பெற்றோருடன் சேரும் மன நிலையில் இருந்தார்.

சேத்துக்குளி கோவிந்தனுக்கு வீரப்பனுக்குப் பதில் தானே தலைவனாகும் ஆசை வந்து விட்டது. இந்த பிளவை மையமாக வைத்துத் தான் எங்களது உளவு நெட்வோர்க் வெற்றிகரமாக செயல்பட்டது.

மேலும், தென் ஆற்காட்டைச் சேர்ந்த சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுடன் வீரப்பன் தொடர்பு கொண்டதும் எங்களுக்குத் தெரிய வந்தது.

எங்களது இந்த நடவடிக்கை 4 வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. மிகச் சரியான, ரகசியமான முறையில் செயல்பட்டு வெற்றிபெற்றோம். இந்த நடவடிக்கையில் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மிக முக்கியப் பங்கு வகித்தார்.

அத்தோடு காவலர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துரை, எனது கார் டிரைவர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, சந்திரமோகன், ராஜேஷ் கண்ணா, டி.எஸ்.பி. உசேன், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சம்பத் உள்பட பலரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

இவர்களில் டி.எஸ்.பி. உசேனின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அதேபோல, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு பல நாட்கள் இரவுகளில் காடுகளில் தங்கி வீரப்பன் கும்பல் குறித்து தகவல் சேகத்துள்ளார். அவர்களுக்கு நான் வீர சல்யூட் செய்ய கடமைப்பட்டவன்.

அத்தோடு அதிரடிப்படையின் சமையல்காரர் முதல் எஸ்.பி. வரையிலான அனைவரையும் நான் வணங்குகிறேன். அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள்தான் இந்த நடவடிக்கையின் ஹீரோக்கள். அனைவருக்கும் எனது சல்யூட்.

அத்தோடு வீரப்பன் வேட்டையை முன்னின்று நடத்தி இதற்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்த எனது குருநாதர் வால்டேர் தேவாரம், கர்நாடக முன்னாள் அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி, சஞ்சய் அரோரா உள்ளிட்ட முன்னோடிகள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்களைத் தெவித்துள்ளார். படையினரை அவர் கவனித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் விஜயக்குமார் உணர்ச்சிவசப்பட்டவராய்.
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)