Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#7
மேலதிக செய்தி:

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை

தர்மபுரி:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்த சந்தனக் கடத்தல் மன்னன் கூசை முனியசாமி என்ற வீரப்பன் (வயது 65) நேற்றிரவு தமிழக அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கௌடா, கோவிந்தன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆம்புலன்சில் சுற்றிய வீரப்பன்:

நேற்று இரவு 10 மணியளவில் தர்மபுரி மாவட்டம் ஒகேனகல் அருகே பாப்பாரப்பட்டி காட்டுப் பகுதியில் பாடி என்ற இடத்தில் வீரப்பனும், அவரது கும்பலும் ஒரு வாகனத்தில் நடமாடுவதாக அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அதிரடிப் படையினர் 4 ஜீப்களில் அங்கு விரைந்தனர். அப்போது ஒரு ஆம்புலன்ஸ் (எஸ்.கே.எஸ். ஆம்புலன்ஸ், சேலம்) அங்கு சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் காட்டுக்குள் ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்று சந்தேகப்பட்ட விஜயக்குமார் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

ஆனால், அந்த ஆம்புலன்ஸ் நிற்கவில்லை, மாறாக உள்ளே இருந்தவர்கள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கன நேரத்தில் தங்களை சுதாரித்துக் கொண்ட அதிரடிப்படையினர் தங்கள் வேன்களில் பதுங்கினர்.

ஆம்புலன்ஸிசில் வீரப்பன் கும்பல் இருப்பதை உணர்ந்து கொண்ட அதிரடிப் படையினர் அவர்களை சரணடையுமாறு கூறினார்.

ஆனால் வீரப்பன் கும்பல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிரடிப் படையினர் அந்த ஆம்புலன்ஸை நோக்கி பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். சரமாரியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆம்புலன்ஸ் சல்லடையானது.

சுமார் அரை மணி நேரம் இச் சண்டை நீடித்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸிலிருந்து நடந்த துப்பாக்கிச் சூடு நின்று போனது.

இதையடுத்து அதிரடிப்படையினர் வேனைத் திறந்து பார்த்தபோது, வீரப்பன் மற்றும் கும்பல் உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.

உடனடியாக அந்த உடல்களை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அதிரடிப் படையினர் கொண்டு சென்றனர்.

மீசையில்லா வீரப்பன்:

வீரப்பனும் அவரது கூட்டாளி சேத்துகுளியானும் வழக்கமான மீசை, தாடியுடன் இல்லாமல் ட்ரிம் செய்யப்பட்ட சிறிய மீசையுடன், மிகவும் திடகாத்திரமான தோற்றத்தில் காணப்பட்டனர்.

4 பேரின் உடல்களும் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அதன் பிறகு வீரப்பனின் உடலை அவரது மனைவி முத்துலட்சுமியிடம் ஒப்படைக்க அதிரடிப்படை முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 20 ஆண்டு கால வீரப்பன் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது.

Thatstamil.com
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 10-19-2004, 01:02 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 01:18 AM
[No subject] - by Thiyaham - 10-19-2004, 03:37 AM
[No subject] - by Sriramanan - 10-19-2004, 06:15 AM
[No subject] - by hari - 10-19-2004, 06:58 AM
[No subject] - by hari - 10-19-2004, 07:12 AM
[No subject] - by shanmuhi - 10-19-2004, 08:29 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 09:21 AM
[No subject] - by hari - 10-19-2004, 10:36 AM
[No subject] - by hari - 10-19-2004, 11:08 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 12:00 PM
[No subject] - by yalini - 10-19-2004, 01:05 PM
[No subject] - by hari - 10-19-2004, 03:54 PM
[No subject] - by hari - 10-20-2004, 07:40 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:22 PM
[No subject] - by kavithan - 10-20-2004, 09:54 PM
[No subject] - by kuruvikal - 10-22-2004, 11:02 AM
[No subject] - by shanmuhi - 11-02-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)