Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனந்த சங்கரியின் ஆலோசனையா? சுய விளம்பரமா? இல்லை கருணா விற்கு
#5
ஆனந்தசங்கரியின் கடிதத்திற்கு யாழ். பொது அமைப்புக்கள் கண்டனம்

தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றியோ, தமிழ் மக்கள் உணர்வுகளைப் பற்றியோ, தமிழ் மக்கள் தங்களது இதய தெய்வமாக போற்றும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றியோ புரிந்து கொள்ளமல் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கடிதமொன்றினை வெளியிட்டதற்கு யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு ஆனந்த சங்கிரியின் கடிதத்திற்கு யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கடந்த பொதுத்தேர்தலில் கட்டுப்பணத்தைக்கூட பெற முடியவில்லை உங்கள் அரசியல் சாணக்கி;யம் என்னவென்று மக்களுக்குத் தெரியும் எதற்குமே அருகதையற்ற உங்கள் செயற்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அரசியல் என்று நீங்கள் செய்யும் மோசடிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தில்லுமுல்லுகளும் நாமறிவோம்.

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த கனடாவில் பொங்கு தமிழ் பொங்கிப்பிரவாகித்தது அந்த பொங்கு தமிழைக் குழப்ப நீங்கள் எடுத்த பகீரதப் பிரயத்தனத்தை எம்மால் மறக்க இயலவில்லை நீங்கள் அந்த முயற்சியில் தோற்றுப்போனது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி.

உங்கள் பழைய பொய்ப் பித்தலாட்ட அரசியலிற்கு எடுபடும் நிலையில் தாயகம் தொட்டு சர்வதேசம் வரை வாழும் தமிழர்கள் இல்லை என்பதனைப் புரிந்த கொள்ளுங்கள் இது தமிழ்த் தேசிய தலைவரின் பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு நின்று விடுதலைக்குப் போராடும் காலம் என்பதனை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, கௌரவம், பாதுகாப்பு தொடர்பாகவோ அல்லது தமிழர்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ சங்கரிக்கு அரசியல் முதிர்ச்சி இருந்திருந்தால் யாதார்த்தற்திற்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டிருக்க மாட்டார்.

வடக்கு கிழக்கு இணைந்தது தான் தமிழர் தேசியம் அதுவே எமது தாயக கோட்பாடு அது இரத்தம் சிந்திப் பெற்றது ஆயிரமாயிரம் மாவீரர்களின் தீரத்தாலும், தியாகத்தாலும் அது விளைந்தது அதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் அருகதை கிடையாது.

ஆயிரமாயிரம் மாவீரர்கள் பெற்றுத் தந்த தமிழ்த் தேசியத்தை கூறு போட எவருக்கும உரிமை கிடையாது. இடைக்கால தன்னாட்சி அதிகார சபை புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என கடந்த பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். இதனைச் சர்வதேச சமூகமும் அங்கீகரித்திருக்கின்றது. ஆதலால் பல வழிகளிலும் பலம்கொண்ட புலிகளிடம் தானே இடைக்கால அரசு கொடுக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இதைவிடுத்து அரசு மாற்று யோசனை வைத்தாலும் அதனால் எதுவும் ஏற்படப்போவதில்லை. தமிழ்த் தேசியத்திற்கு வலுவ10ட்டக்கூடிய தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வு திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதன் மர்மம் என்ன?

கிழக்கு மாகாணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் ஏனைய இனத்தவர் சம எண்ணிக்கையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், இராணுவ ஆக்கிரமிப்பும் தான் இதனை சங்கரி அவர்களே நியாயப்படுத்துகிறீர்களா?

இடைக்கால தன்னாட்சி அதிகார சபையானது தமிழ் மக்களால் தான் முன்வைக்கப்பட்டது என்பதை அறியவில்லையா? சர்வதேச நாடுகளில் வைத்துத் தானே நகல் வரையப்பட்டது அது உங்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. அதைவிட்டு புதுக்கதை விடாதீர்கள் வயதாகிவிட்டால் வாலைச் சுருட்டிக்கொள்வது தானே வீண் வம்புக்கு ஏன் போவான்? தமிழ் மக்களின் தன்மான விடுதலைப்போராட்டத்திற்கு துணை நிற்காமல் விட்டாலும் அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்.

தியாகமும், தீரமும் நிறைந்த போராளிகளின் தலைவன் உலகில் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு தலைவன் தமிழர்களின் விடுதலைக்காக கழுத்திலே நஞ்சை ஏந்திக் காத்திடும் தலைவன் தன்னலமில்லாத அந்த தலைவனுக்குப் புத்திமதி கூறுகிறாயா? சங்கரியே உன் புத்தி எங்கே போனது? உமக்கு என்ன தகுதி இருக்கிறது? புத்தி கூறும் அளவுக்கு உமக்கு எங்கே யோக்கியதை இருக்கிறது? விடுதலை என்னவென்று தெரியாதா? வெற்று வேலையாகி விளையாட்டாகத் தழிழனது வீரத்தை சோதித்துப் பார்க்கின்றாயா? வேண்டாம் சங்கரி ஐயாவே! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழநாதம்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-17-2004, 01:57 AM
[No subject] - by hari - 10-17-2004, 02:41 PM
[No subject] - by hari - 10-18-2004, 01:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)