10-18-2004, 01:21 PM
tamilini Wrote:Quote: குட்டிப் பூனை
குத்துக்கரணம் அடித்து செய்த
குறும்புத்தனத்தால் களைத்து
குறும்புக் குணம் குறுகி அமைதியாய் இருக்க
குள்ளக் குணக் காதல் பைத்தியம்
குமுறும் காதலை
குட்டி மீது வைத்து
குளப்படி செய்ததுதான் உண்மை...!
கவிதை எழுந்ததோ கற்பனையில்..
களைத்து விழுந்தேன் என்று..
சொன்னதா அந்த பு}னை..
கண்ணைக்கவரும்..
அழகிய பு}னையை..
அழகிற்காய்.. கணணியில்..
அடக்கியதில் தப்பில்லையே..
அழிகிய பு}னைதனை கொண்டு
அன்பால் ஒரு கவி வடிக்க எண்ணினேன்..
அதன் அமைதியையும்..
அடக்கத்தையும் பாக்கும் போது..
காதலில் வழுந்த மாதிரி
கற்பனை தான் என்
கண்முன் தோன்றியது.. அவை
கவி வடிவாக.. என்
காலத்தை பாரு..
பு}னைக்கு வக்காலத்து வாங்க
களத்தில குருவிகள்...!
உண்மை இது தான்..
தவறு திருத்திக் கொள்ளுங்கள்
தவறாமல் பாருங்கள்
தப்பாமல் அது பூனையல்ல.... பூனைக்குட்டி....!
தாய்ப்பால் மறக்கா குட்டி மீது
தப்பான காதல் பார்வை...!
தங்கள் பார்வைக்கு
தக்கதென்பதற்காய் குட்டியைத் திருடியது
தாங்க முடியாக் குற்றம்
தாய் வந்து குருவியிடம் முறையிடுகிறது...!
தாய்மையை வருத்தியது
தாய்தன் அன்புக் குட்டியை வருத்தியது
தன் பொல்லாக் காதற் பார்வையை
தங்கக் குட்டி மீது தந்தது
தனக்கேற்றதாய் பொய்கள் வரிகளில் பதித்தது
தக்கன அனைத்தும் தந்தாயிற்று
தகுந்த தண்டனை வழங்குங்கள்...!
தரதரவென்று வீதியெங்கும் இழுத்துச் செல்லுங்கள்
தான் கொண்ட அரைப்பைத்தியம்
தீரும் வரை என்றுமே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

