10-16-2004, 08:12 PM
tamilini Wrote:Quote:
மலரோடு வண்டுக்கு
மலரும் காதல்
மலரை வருத்தாது...!
மலரோடு குருவியின் நேசம்
மனதோடு மகிழ்வு
மலருக்கு வசந்தம்...!
எனது மலர் மீதான காதலும்...
மலரை வருத்தாதே........! :wink:
Quote:மானிடத்தின் மயக்கக் காதலில்
மலர்ப் பலி...!
மலராகிக் கனியாகி
மலர வேண்டிய வாழ்வு
மடிந்து சிதையுது -
வெட்டிப்பேச்சில் காலம் கடத்தும் மானிடனே...
உன்னைப்போல் நானிருந்தால்...
போட்டிடுவேன் பல சட்டங்கள்..
மலரைக்காத்திட
பண்ணிடுவேன் பல ஆக்கினைகள்..
பாளாய் போன அந்த மனிதருக்கு...
நீங்கள் செய்ய வேண்டியவையை விட்டுவிட்டு
வாய்ப்பேச்சில் காலம் ஓட்டும்..
விந்தை தான் என்னவோ...?? :roll: :roll:
பறித்துப் பற்களால் கவ்வி
பாதி உயிரில் பரிதவிக்க வைத்து
பரிசளிக்க பற்றியதாய் பிதட்டிய பப்பியே - இப்போ
பருவ மலரிடத்தில் காதலா...?!
பாவ மனிதரிடத்தில்
பலிக்கும் உன் நாடகம்
பார் முழுதும் பறந்தே களிக்கும்
பறவை எனக்கு கதையளக்காதே...!
நான் அற்ப மானிடன் அல்லன்
நல்ல கொள்கைக்காய்
நாலும் துறந்து வாழும் சுதந்திரப் பறவை
நாயே உன்னிலும் பலமடங்கு மேல்
நல்லது சொன்னால்
நன்மை பிறக்கும் எனில் கேள்
நடக்கப் பழகு நல் வழியில்...!
நாய் வாலை நிமிர்த்த முடியாது
நல்லாத் தெரியும் எனக்கு
நப்பாசை கொண்டு சொன்னேன்
நாலு வார்த்தை நல்லதாய்
நாயாய் கருதாது
நல்ல பிராணியாய் கருதி - நீயோ
நான் "நாய் தான்" என்று அடம்பிடித்தால்
நான் தான் என் செய்ய முடியும் சொல்....!
நல்லதுக்கு காலமில்லை
நாளை நீயாய் தேடும் வேளை
நன்மை தூர இருக்கும்....தீமை அண்மித்திருக்கும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

