10-16-2004, 01:45 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40179000/jpg/_40179916_warne_wicket270.jpg' border='0' alt='user posted image'>
<b>533 விக்கெட்கள்: வார்னே சாதனை</b>
இந்திய வீரர் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் வார்னே, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அனில் கும்ளே 4வது விக்கெட்டை வீழ்த்திய போது, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறினார். இவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோசை பின்னுக்குத் தள்ளினார்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் வார்னே, யுவராஜ் விக்கெட்டை கைப்பற்றியபோது அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தார்.
இந் நிலையில் இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 114 டெஸ்டில் விளையாடியுள்ள வார்னே 533 விக்கெட்டுகள் பெற்றுள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
<b>வார்னே (ஆஸ்திரேலியா): 114 போட்டிகள், 533 விக்கெட்கள்
முரளிதரன் (இலங்கை): 91 532
வால்ஷ் (மேற்கு இந்திய தீவுகள்): 132 519</b>
மெக்ராத் (ஆஸி): 99 446
கபில்தேவ் (இந்தியா): 131 434
ரிச்சர்டு ஹாட்லி (நியூசி): 86 431
வாசிம் அக்ரம் (பாக்): 104 414
கும்ளே (இந்தியா): 86 409
அம்புரோஸ் (மே.இ.): 98 405
போத்தம் (இங்கி): 102 383
thatstamil.com & bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>