07-23-2003, 07:01 PM
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்றும் நீக்க முடிýயாத மனச்சிதைவுகளுடன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து தமிழ்ச் சமூýகத்திற்கு இழைக்கப்பட்ட சின்னாபின்னத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கும் மூýன்று பெண் கள் அமைப்புகள், தமிழ்ச் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் தொடர்ந்து மௌனித்திருக்கும் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிýத்துள் ளன.
இலங்கையின் அன்னையரும் புதல்விகளும் அமைப்பு, சமாதானத்திற்கான பெண்களின் கூýட்ட மைப்பு, சமாதானத்திற்கான பெண்கள் கருத்தரங்கு ஆகிய மூýன்று அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள கூýட்டறிக்கையொன்றில், 1983 ஜூலை சம்பவத்திற்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கின்றன.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிýருப்பதாவது:
1983 ஜூலையில் நிகழ்ந்த அரசியல்மயமான திட்டமிடப்பட்ட துயர்மிகு இனவன்முறை காரண மாக தமது உயிர் மற்றும் வீடுவாசல்களை இழந்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர் களை மிகுந்த வருத்தத்துடனும், பச்சாதாபத்துடனும் நினைவு கூýர்கிறோம்.
அன்றிலிருந்து தமது அன்புக்குரியோரை, நண்பர்களை இழந்து, போற்றிப் பாதுகாத்து வந்த நினைவுகளை இழந்து, காயப்பட்டு வடுப்பட்ட நினைவுகளும் மனச்சிதைவுகளும் படிýந்து கிடக்க வாழ்ந்துவரும் தமிழ்ச் சமூýகத்திற்கு எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிக்கின்றோம்.
பாரிய அளவில் இடப்பெயர்வுகளை உருவாக்கியதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை தமது பிறந்த நாட்டை விட்டுத் தப்பியோடிý உலகின் பல பாகங்களிலுமுள்ள நாடுகளில் தஞ்சம்புக வைத்த தமிழ் சமூýகத்தின் துயர்மிகு சின்னா பின்னத்துக்கு வழிவகுத்த, இவ்வன்முறையின் விளைவுகளுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
நவீன இலங்கையின் மிகப் பயங்கரமான, திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான 1983 ஜூலைச் சம்பவம் நடந்து 20 ஆண்டுகளைக் குறிக்கும் இவ்வருடத்தில், அந்தச் சம்பவமும் அதன் பின் விளைவுகளும் ஏற்படும் வண்ணம் அதிகாரத்தைக் கையெலடுத்து திட்டமிட்டு செயற்பட்டோ ரையும், அதிகாரத்தைத் தட்டிýக்கழித்துப் பராமுகமாக இருந்தோரையும் மிக வன்மையாகக் கண்ட னம் செய்கிறோம். தமிழ் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் மேலும் மௌனித்திருக்கும் அரசை நாம் வன்மையாகக் கண்டிýக்கிறோம். இலங்கையின் இன மோதலுக்கு சுமுகமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை எட்டுவதற்காக உழைத்து வந்திருக்கும் பெண்களாகிய நாம் 1983 ஜூலைச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரு கின்றோம். இலங்கையில் இனி எந்த சமூýகத்திற்கும் இவ்வகையான திட்டமிட்ட படுகொலை என்ற தலைவிதி அமையாதிருக்க வேண்டிý ஒவ்வொரு முயற்சியையும் எடுப்போமெனச் சத்தியம் செய்கிறோம்.
எங்களுடைய சகல மக்களதும் மனித, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எமது நாட்டிýல் நின்று நிலைக்கக் கூýடிýய சமாதானமொன்றை எட்டுவதற்கு உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளோம். இது இலங்கைத் தமிழ்ச் சமூýகத்தினரதும் இன்னொரு 1983 ஐ விரும்பாத சகல இலங்கையரதும் விசுவாசமான எதிர்பார்ப்பாகுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.