10-15-2004, 12:27 PM
தமிழ்மக்கள் அமெரிக்காவையோ இல்ல எந்த நாட்டையுமோ பகைக்கவில்லை... எதிரிகளாகக் கருதவில்லை... ஆனால் அநியாயங்களை அடக்குமுறைகளை ஆக்கிரமுப்புகளை துரோகங்களை அவற்றை சந்தித்தவர்கள் என்ற வகையில் எதிர்க்கின்றனர்...அதுமட்டுமன்றி மற்றவர்களை முழுமையாக நம்பி சோரம் போகும் நிலையிலும் தமிழ்மக்கள் இருக்கக்கூடாது... தமக்கென்று தனித்துவமானதும் உகந்ததுமான பாதையை தீர்மானித்துப் பயணிக்க வேண்டியதே தமிழர்கள் தங்கள் இலட்சியத்தை மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அப்பால் அடைய வழிசெய்யும்...!
யூட் அவர்களே உங்கள் ஆதங்கள் போல் எமக்குள்ளும் உதிப்பதுண்டு... காரணங்களை தேடித் தெரிந்து கொண்டு யதார்த்த நிலையை அறிந்த போது ஆதங்கங்கள் கொஞ்சம் தனிந்தன... ஆனா இன்னும் இருக்கின்றன...! நாம் உங்கள் ஆதங்கத்தை வரவேற்கிறோம்... அதை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் பலதரப்பட்ட விளக்கங்கள் விடைகளாக கிடைக்கும்..அவற்றைக் கொண்டு தீர்மானிக்கக் கூடியவற்றை தீர்மானிக்க இலகுவாக இருக்கும் இல்லையா...மேலும் புதிய ஆதங்கங்கள் பிறக்கவும் வழி செய்யும்... யாரோ ஒரு கவிஞன் சொன்னான் தப்புச் செய்தால்தான் தத்துவம் பிறக்கும் என்று...தப்புச் செய்வோம் தத்துவம் பிறப்பதற்காக அன்றி மற்றவரை துன்பப்படுத்துவதற்காக அல்ல...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>