Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்
#1
அக்டோபர் 15, 2004
thatstamil.com

இலங்கை: கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் நிலவுவதாக இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறியுள்ளார்.


தற்போது ராணுவ உதவியுடன் தலைமறைவாக இருந்து வரும் கருணா தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

ஆனால், அந்தக் கட்சி இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

இது குறித்து கொழும்பில் இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறுகையில்,

தற்போது வட கிழக்கு மாகாணங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல் ஆணைய சட்டப்படி, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

எனவே கருணாவின் புதிய கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சியாக கருணாவின் கட்சி இயங்குவதாக வெளியாகும் செய்திகள் தவறு என்றார் சேனநாயகே.

சேனநாயகேவின் இந்தப் பேட்டியால் கருணா ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சட்டப்படி, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இந்த சட்ட சிக்கலிலிருந்து மீண்டு தங்களது கட்சியை பதிவு செய்வது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Reply


Messages In This Thread
கட்சிக்கு அங்கீகாரம் - by yarl - 10-15-2004, 10:04 AM
[No subject] - by tamilini - 10-15-2004, 11:03 AM
[No subject] - by hari - 10-16-2004, 08:03 AM
[No subject] - by aathipan - 10-24-2004, 01:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)