07-23-2003, 06:27 PM
இளைஞன் Wrote:கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும்,ஏட்டுச் சுரைக்காய் கறிக்கதவாது என்கிறீர்கள்.. சரி.. உங்கள் பார்வைக்கே வருவோம்.. பொதுவாக என்னென்ன விசயங்களில் குறிப்பாக ஈழத் தமிழ் ஆண் சமுதாயம் பெண்களை அடக்குகிறது.. என்பதையும், அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்திற்கு எதிராக எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் உங்களால் ஆதாரத்துடன் தரமுடியுமா?
சமூகவியலும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, படித்ததிற்கொப்ப என்றும் ஒழுகும் கல்வியல்ல.
உயிரியலை வைத்து இங்கு சமத்துவமும் உரிமைகளும் பேசப்படுவதில்லை. ஆதிக்கம்
என்றால் என்ன, அடக்குமுறை என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன, விழிப்புணர்வு
என்றால் என்ன என்பதை உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்கள் தடம் மாறியிருக்காது.
ஏதோ சில பெண்கள் தாம் அதனுள் இல்லை என்றபோக்கில் நின்று எழுதுவதை வைத்து கருத்தகளை கொண்டு செல்லாதீர்கள்.. முடிந்தால் ஆதாரத்துடன் நீங்களும் அடக்குமுறைகளைப்பற்றி கூறுங்கள்.. அல்லது ஏற்கெனவே எழுதியவர்களும் ஆண்களால் தங்களுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதையாவது கூறி ஆதாரப்படுத்தலாமே?!
.

