10-13-2004, 09:05 PM
மேலே தரப்பட்ட செய்தி தொடர்பாக சிறீலங்காவின் பதில்....
<b>புதிய கட்சிகள் எதுவும் பதிவு பெறவில்லை - தேர்தல் திணைக்களம் </b>
தற்போது எந்தவொரு அரசியல் கட்சியையும் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் தினைக்களத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவரும், தற்போது தமிழினத்திற்கெதிரான தேசவிரோதச் செயல்களில் முனைப்புடன் ஈடுபடுபவருமான கருணாவை தலைமையாகக் கொண்டு ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழின விரோத ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக உள்நாட்டு ஊடகங்கள் இன்று தேர்தல் திணைக்களத்ததுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறிப்பிட்ட பெயரில் எந்தவொரு கட்சியும் இதுவரை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கருணாவை மையமாக வைத்து துணைப்படையை உருவாக்க முயலும் சிறீலங்கா அரசின் முயற்சிகளிற்கான காற்கோளாகவே இவ்வாறான செய்தி இதர அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் துணையுடன் பரப்பப்பட்டுள்ளதாகவே மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசிய துணைப்படை என்ற பெயரில் இயங்க முயற்சித்த போதும் அது தோல்வி கண்டதாலேயே தற்போது புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பான புரளி திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டுள்ளது. இம் முயற்சியின் பின்னணியில் சமாதானத்தை விரும்பாதவர்கள், குறிப்பாக அரச ஆதரவு ஆயுதக்குழுவினரே செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>