10-13-2004, 12:44 PM
அன்புடன் அஜீவன், செய்தியை பார்த்ததும் மிகவும் கவலையாக உள்ளது. நடந்தவை அனைத்தும் நன்மைக்கே என்ற முதுமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இழந்தவைகளை நினைக்கையில் மிகவேதனையாக இருக்கும். ஆனால் ஒரே ஒரு ஆறுதல் விலைமதிக்கமுடியாத உயிரிற்கு எந்த ஆபத்தும் வராதமையே. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்று விட்டதே என்ற அந்த ஆறுதல் தான் மனதை திடப்படுத்த வேண்டும். இழப்புகள் கண்பதும் அதை அடிக்கல்லாகவைத்து மீண்டும் வெற்றி காண்பதும் ஒரு கலைஞனுக்குப் புதிதல்ல. அஜீவன் நீங்கள் மிகவும் உறுதியான கலைஞன். நீங்கள் உறுதியடைந்து தொடர்ந்து வெற்றி பெற எமது வாழ்த்துகளும் உறுதிகளும்.
அன்புடன் ஈழம் திரை நண்பர்கள்.
அன்புடன் ஈழம் திரை நண்பர்கள்.

