10-12-2004, 12:52 PM
அன்பு அஜீவன்!
எல்லாவற்றையும் தீ கௌவிக்கொள்ளும் காட்சி ஒரு கனவாக இருக்கக் கூடாதா? ஏக்கம் தங்களுக்கு மட்டுமல்ல. தேடித்தேடிச் சேகரித்தவை. வாழும் காலத்தின் செயலிருப்பைப் பதிவுறுத்தும் எவ்வளவோ ஆவணங்கள்..... பொக்கிசங்கள்... தங்களது வேதனையைச் சொல்லில் வரைவது மிகக் கடினம். ஆயினும் தங்கிடம் நான் கண்ட துடிதாட்டம் பாதிப்புக்குள்ளாதது கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.
அஜீவன் நிலைதடுமாறியது தங்களது மடலின் தலைப்பிலிருந்துது. ஆயினும் வழமையாக நிலைதடுமாறுபவர்கள் ஏதுமே செய்ய முடியாதவர்களாகி, பெரும் மன இறுக்கத்தினுள் மூழ்கி, தமது ஆளுமையைஞம் பறிகொடுத்துப் பரிதவிப்பார்கள். தலைவர்களாலும், சிறந்த உடல்-உளப் பயிற்சி பெற்றவர்களாலும்தான் திடீரென நடைபெறும் அசம்பாவிதங்களால் தடுமாறாத திறன் காணப்படும். அத்தகைய மனவில்பை தங்களது எழுத்தில் கண்டேன். நிலை தடுமாறிய வேளையிலும் தங்களது தன்னாற்றல் துடிப்பாக இருப்பது எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்வையும் கொடுத்தது.
தங்களுக்கேற்பட்ட சோக நிகழ்வு பற்றிய விபரணச் சித்திரத்தை தாங்களே, அந்தவேளையிலேயே வரைந்தது என்னை ஆச்சரிய மூட்டத்தவறவில்லை. அதற்கேற்ப படங்களையும் இணைத்து கோவையாக்கியது தங்களிடம் ஒரு போர்க்காலப் பத்திரிகையாளன் ஒருவன் இருப்பதை உணரவைத்தது. ஆம் தங்களிடம் ஒரு துணிச்சலான போர்க் களப்திவாளத் திறன் இருக்கிறது. இவ்வாற்றலை வளமூட்டி அரிய காட்சிப் படிமங்களாக தங்களால் தரமுடியும். தங்களால் நிறையவே சாதிக்க முடியும்.
இந்த உற்சாகமான அஜீவனுடன்; நாங்கள் எப்போதும் இருப்போம்.
கிபிஅரவிந்தன் தனது கவலையை தங்களிடம் தெரிவிக்கிறார். தனது உறுதியான கையை நீட்டுகிறார்.
நன்றி
முகுந்தன் குடும்பம். 12.10.2004